பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவிட்டில் அறைவதுபோலக் கேள்வி. தடுமாறினான் ஜார்ஜ், 'பென்னிட்டுக்கு அந்த விஷயம் எப்படித் தெரிந்தது?" என்று யோசித்தான். - "ஏன் முழிக்கிறேl உண்மையா, இல்லையா? டயரியிலே ஏன் எழுதலே?" - - * . "அதைப் பெரிய விஷயமாகின்ைக்கல்ே..." , - "தெருவிலே காலை வச்சா, அது என்ன காரியமானாலும் டயரியிலே குறிச்சாகணும் தெரியுமில்லையா? உங்களுக்கு எத்தனை வாட்டி சொல்றது? உங்க மூவ்மெண்ட்ஸை விவரமா எழுதி வெச்சாத்தானே காளைக்கு ஏதாவது கடந்துபோச்சுன்னா ங்ேக எங்கெங்கே போயிருந்தீங்கன் னு கண்டுபிடிக்க உதவும்?" "மன்னிச்சுடுங்க! இனிமே இந்தத் தவறு நடக்காம பார்த்துக்கறேன்.' "இதோ பாரு இனிமே மன்னிப்பு இல்லை! ஐ வில் கில் யு! நீ இருக்கிறது இரகசியப் படை தெரிஞ்சுதா?" வார்த்தை சூடாக வீசி அடிக்க, ஜார்ஜ் கடுங்கிப்போனான். ரகசியக் குழுவில் சற்று ஏறுமாறாக இருக்தவர்கள் திடீரென்று காணாமல் போயிருக்கிறார்கள். அவர்களெல்லாம் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது ஜார்ஜுக்குத் தெரியும். கண்கள் கலங்க "இனிமே எந்தத் தவறும் பண்ண மாட்டேன், பாஸ்' என்றான் எடுக்கத்தோடு, . . . . . சரி அந்த டயரியிலே விசிடிங் கார்ட் இருந்ததே. அது யாருடையது?" - - - "எனக்குத் தெரியாது பாஸ்!" "ஜார்ஜ் விளையாடாதே இது கெருப்பு விளையாட்டு. அந்தப் பெண்ணோட உனக்கு இதுக்கு முன்னாடி தொடர்பு உண்டா?" • . ... • "சத்தியமாக் கிடையாது!" - 'அதை யாராவது படிச்சிருப்பாங்கன்னு உனக்குத் தோணல்லையா?" - - 'இல்லை; யாரும் படிக்கலை!" - ரெஸ்டாரண்ட் ஆசாமி அதை எடுத்து வச்சிருந்தானே? அவன் படிச்சிருக்க மாட்டாங்கறது என்ன நிச்சயம்'

54