பக்கம்:வடம் பிடிக்க வாங்க ஜப்பானுக்கு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொடர்ந்து ஐம்பது அறுபது கார்கள் ஒன்றன்பின் ஒன்றாய்ச் சங்கிலித் தொடர் போல் சென்றன. - “கபூகிஸ் தியேட்டச்ல ராஜாத்தி அம்மாதான் கலைவிழா நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கப் போறாங்க,' என்று பெருமையோடு சொன்னார் மனோரமா. விமான கடத்தில் தமிழர்களும், ஜப்பானியரும் வெளி காட்டிவரும் திரிவேணி சங்கமம் போல் கூடியிருந்தார்கள். ஜப்பானியப் பெண்களில் சிலர் தங்கள் குழகதைகளை முதுகிலே சுமந்துகொண்டு காமகிரிப்பேட்டையின் காதசுர இசையை ரசித்துக் கொண்டிருக்தனர். "இக்த ஜப்பானியப் பெண்கள் குழந்தைகளைப் பத்து மாசம் வயிற்றிலே சுமக்கிறார்கள். பெற்றெடுத்தபின் முதுகிலே சுமக்கிறார்கள்!” என்றார் புள்ளி சப்புடு. தவில் வாத்தியக்காரர்கள் ஆவேசமாக மாறிமாறி முழங்கிக் கொண்டிருந்தார்கள். - - “இந்த தவிலைப் பாக்கறப்போ கலைஞரின் பேச்சுதான் எனக்கு ஞாபகத்துக்கு வருது' என்றார் கன்னன். "அதென்ன பேச்சு? சொல்லுங்க' என்று கேட்டார் புள்ளி. 'குழந்தையை அடித்தால், அது அழும். எதிரி ஒருவனை அடித்தால், அவன் குமுறுவான். கொக்தளிப்பான், திருப்பி அடிப்பான். ஆனால் இந்த தவில் இருக்கிறதே, அதை அடித்தால் "அடிக்கிறாயே!' என்று அழுவதுமில்லை. கோபித்துக்கொள்வது மில்லை. அது தன் கோபத்தை நாதமாக வெளிப்படுத்தி நம்மை மகிழ்விக்கிறது. திங்கு செய்யப்படுகிற நேரத்திலே அந்தத் தீங்கை யும் கன்மையாகக் கருதி மற்றவர்களுக்கு காதமாகப் பொழிகின்ற தவிலைப்போல் கா மும் ஏன் இருக்கக் கூடாது என்கிற உணர்வு தமக்கெல்லாம் உண்டாக வேண்டும் என்று பேசியிருக்கிறார்' என்றார் கன்னன். - "அருமையான கருத்து' என்றார் புள்ளி. அன்று இரவு இம்பீரியல் பாலஸில் கலைஞருக்கும் அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கல்வி குப்புசாமி, ஏ. நடராஜன் (டி.வி.) போன்ற தமிழ்நாட்டுப் பிரமுகர்களுக்கும், கலைக் குழுவினருக்கும் மட்டும் மகாராஜாவும் மகாராணியும்.தமிழ்நாட்டுப் ப்ாணியிலேயே, வாழை இலை போட்டு, வடை பாயசத்தோடு விருந்து அளித்தார்கள். . 88