பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

”兹 வடவேங்கடமும் திருவேங்கடமும் மாக எழுந்தருளியுள்ள எம்பெருமான்களைப் பற்றியன வாகும்.இப்பாசுரங்களின் பெருமையை வேதாந்ததேசிகர், செய்யதமிழ் மாலைகள் நாம் தெளிய வோதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின் றோமே?. (தெளியாத-விளங்காமலிருந்த மறை நிலங்கள். வேதப் பகுதிகள்) என்று சிறப்பித்துப் பேசுவர். இவற்றை நாம் பொருளு டன் குருமுகமாகப் பெற்றால் இதுவரை நமக்கு விளங்கா மலிருந்த வேத விழுப் பொருளையெல்லாம் நன்கு அறிய முடியும் என்று அறுதியிடுவர் இந்தச் சுவாமி அவர்கள். நாதமுனிகள் அடைவுபடுத்தியது: ஆழ்வார்கள் வீடுபேறு பெற்று நெடுங்காலமான பிறகு காலவெள்ளத் தாலும் போற்றுவாரின்மையாலும் எப்படியோ மறைந்து போன இப்பாசுரங்களை நாதமுனிகள் என்ற வைணவப் பெரியார் அரும்பாடு பட்டுத் திரட்டி (சுவையான வரலாறு இதுபற்றி உண்டு) வேத வியாசர் வேதங்களை நான்காக வகுத்துத் தொகுத்ததுபோல, நாதமுனிகளும் இப்பாசுரங் களை நான்கு தொகுதிகளாக்கி ஒவ்வொரு தொகுதியிலும் கிட்டத்தட்ட ஆயிரம் பாசுரங்கள் அடங்கியிருக்குமாறு அடைவுபடுத்தினார். பாசுரங்களை அவர் இசைப்பா' "இயற்பா’ எனப் பிரித்து இசைப்பாக்களை மூன்று தொகுதிகளாகவும், இயற்பாக்களை ஒரு தொகுதியாகவும் அடைவுபடுத்தி வெளியிட்டார். இத் தொகுதிகள் வருமாறு : 2. தே. பி-40