பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதலாழ்வார்கள் காட்டும் திருமலைக் காட்சிகள் 191 உருகு காதலில் தழைகொண்டு மழலை வண் டோ ச்சி முருகு நாறுசெந் தேனினை முழை நின்றும் வாங்கி பெருகு சூழ்இளம் பிடிக்குஒரு பிறைமருப் பியானை பருக வாயினில் கையில் நின்று அளிப்பன பாராய்." ಶ್ಟ நாறு:இசுகின்றன முழைதல் இடுக்கு பெருகு சூல்-முதிர்ந்த கருப்பம் மருப்புதந்தம்} இங்கு ஒர் ஆண் யானை சூல்கொண்டுள்ள தன் இளம் பிடியின்மீது அளவற்ற அன்பு கொண்டுள்ளது. ஒரு மலையிடுக்கில் தேன்கூடு கட்டப்பெற்று அடையில் தேன் ததும்பி நிற்கின்றது. உருண்டை வடிவில் காணப்பெறும் அதனைத் தேனிக்கள் சூழ்ந்து மொய்த்துக் கொண் டுள்ளன. ஆண் யானை அண்மையிலுள்ள மரத்தினின்று ஒரு தழைக் கொத்தினை ஒடித்து அதனைக் கொண்டு அவ்வண்டுகளை ஒச்சுகின்றது. பிறகு அந்தத் தேனடை யினை அப்படியே அசையாமல் தனது துதிக்கையினால் வாங்கிச் சூல் நிறைந்து பருகுவதற்கும் சிரமப்படும் தன் பிடியின் வாயில் வைத்துப் பருகுமாறு செருகுகின்றது. இந்த யானை மூங்கில் குருத்தினை விரும்பவில்லை. தேனடையை மட்டிலும் அளிக்க விரும்புகின்றது போலும். முன்னோர் மொழிப்பொருளே யன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவோம்.? 1. கம்ப. அயோத்தி-சித்திர கூட-10 2. நன்னுரல்-9