பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 வடவேங்கடமும் திருவேங்கடமும் என்னும் தமிழ் இலக்கிய மரபினையொட்டிப் பாடும் இயல்பினையுடையவர் நம் தமிழ்க் கவிஞர்கள் என்பதை இப்பாசுரங்கள் காட்டுகின்றன. பூதத்தாழ்வாரைத் திருமங்கையாழ்வாரும் இவர்கள் இருவரையும் கம்ப நாடனும் பின்பற்றி இருப்பதைக் கண்டு மகிழலாம். இதனால் ஒருவரையொருவர் பார்த்தெழுதினார் என்று கூறுதல் கூறுவோரின் கடுகு உள்ளத்தைக் காட்டுகின்றது. இன்னொரு காட்சி: திருமலையில் வாழும் வானரங் கள் எம்பெருமானுக்குச் செய்யும் பூசனைகளைக் காட்டு கின்றார். போதறிந்து வானரங்கள் பூஞ்சுனைபுக்கு ஆங்கலர்ந்த போதரிந்து கொண்டேத்தும் போதுள்ளம்!-போதும் மணிவேங் கடவன் மலரடிக்கே செல்ல அணிவேங் கடவன்பேர் ஆய்ந்து. -இரண். திருவந். 72 (போது-விடியற்காலம்; போது-மலர்; அரிந்து. கொய்து பேர்-திருநாமம்; போது-மலர்) என்பது ஆழ்வாரின் திருவாக்கு. அதிகாலையில் முனிவர் கள் துயில் விட்டெழுமாப்போலே குரங்குகளும் எழுந்து பூத்த சுனைகளிலே சென்று நீராடி அங்குள்ள செவ்வி மலர்களைக் கொய்து கொண்டு போய்த் தன் சாதிக்கேற்ற வாறு ஏதேனும் ஒன்றைத் துதிசெய்து பணியா நிற்கும் என்கின்றார். இதனை அடியொற்றியே கம்ப நாடனும் சித்திர கூடக் குரங்குகளின் செயல்களை எடுத்துக் காட்டுவான். இங்குள்ள குரங்குகள் மூப்படைந்து கண் இடுகிப்போய் வழியறியாது வருந்தும் மாதவர்க்கு அவர் செல்ல வேண்டிய அருநெறிகளைக் காட்டுகின்றன.