பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 வடவேங்கடமும் திருவேங்கடமும் என்று திருவேங்கடத்தில் எம்பெருமான் நின்ற திருக் கோலத்தில் இருப்பதைக் காட்டுவார். வேங்கடம்-சூழ்நிலை திருமலையில் மழைபோல் சொரிகின்ற அருவிகள் (ஆகாய கங்கை, பாதாள கங்கை, கபில தீர்த்த அருவி போன்றவை) அங்குமிங்கும் கிடக் கின்ற இரத்தினங்களைத் திரட்டிக்கொண்டு வந்து இழிகின்றன. மலைப்பாம்புகள் அவற்றை மின்னல் என்று மயங்கி புற்றிலே சென்று மறையும். களிற்றி யானை அந்த இரத்தினங்களின் ஒளியைக் கண்டு அவற்றை நெருப்புச் சுவாலைகள் என்று மயங்கி அஞ்சி நிற்கும்; பாம்பின் வாய்ப்பட்டதென்று வருந்திச் சோராத துயரத்துடன் அஞ்சுகின்ற பெண்யானை பிளிறும் பேரொலி பக்க மலைகளில் எதிரொலிக்கும். இத்தகைய சூழ்நிலையைக் சங்க இலக்கியங்களில் கண்டு மகிழலாம். எடுத்துக்காட்டாக, ஞால்வாய்க் களிறு பாந்தட் பட்டெனத் துஞ்சாத் துயரத் தஞ்சுபிடி பூசல் நெடுவரை விடரகத் தியம்பும் கடுமான் புல்லிக் காடிறத் தோரே.8 (ஞால்-தொங்குகின்ற; பாந்தன்-பெரும் பண்டி தர்; விடர்-மலைப்பிளப்பு) என்பது மாமூலனார் பாடிய பாலை நிற வருணனைப் பகுதி (இப்பாடல் புல்லி ஆண்ட வேங்கடமலைப் பகுதி). தொங்குகின்ற வாயையுடைய ஆண்யானை பெரும்பாம் பின் வாயில் அகப்பட்டுக் கொண்டது. இதனைக் கண்டு சோராத துயரோடு அஞ்சுகின்ற பெண்யானை பிளிறும் பேரொலி நீண்ட மலையிடத்துள்ள விடரகத்தே சென்று. 6. நற். 14.