பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்திசாரர் கருத்தில் திருவேங்கடம் I Ho ...வேங் கடவா என்னுள்ளம் புகுந்தாய் திருவேங்கட மதனைச் சென்று .........காணலுறுகின்றேன் (41) என்பது ஆழ்வாரின் திருவாக்கு. திருவேங்கடமலையில் யானையொன்று தன் துதிக்கை யைத் தூக்கிக்கொண்டு கம்பீரமாக நிற்கின்றது. தேவ லோகம் மலைக்கு அருகிலிருப்பதால் அங்குள்ள முழு மதியும்-பூர்ண சந்திரன் -ஒளிவிட்டுப் பிரகாசிக்கின் நான். அதனைப் பிடுங்கித் திருவேங்கடமுடையானுக்கு 'மங்கல விளக்காக வைக்க எண்ணுகின்றது. இக்கருத்தில் உள்ள யானை அசையாது ஆடாது இருப்பதால் அதனை எளிதாகப் பிடித்து விடலாம் என்று நாற்புறம் சூழ்கின்றனர் வேடர்கள்; மலைவாழ் குறவர்கள் அதன் மீது அம்புகளைப் பிரயோகிப்பதற்காக வில்லும் கையு மாக நிற்கின்றனர். இத்தகைய திருமலையை நாட்டி லுள்ளார் அனைவரும் திரண்டு எழுந்து வலம் வந்து அந்த மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாகப் பாடி ஆடினால் நல்லது என்று திருவுள்ளம் கொள்ளுகின்றார் ஆழ்வார் (நான். திருவந். 46). நன்மணி வண்ணனான திருவேங்கட முடையான் திருக்கோயில் கொண்டிருக்கும் மலைச்சாரலில் யாளி களும் வலிமை மிக்க சிங்கங்களும் உலவுகின்றன. பொன் னையும் மாணிக்கத்தையும் முத்துகளையும் அருவிகள் கொண்டு வந்து கொழிக்கின்றன; மலர்பூத்த மரங்கள் எம் மருங்கும் நிறைந்து இருந்து அழகைப் பொழிகின்றன. காடுகள் மந்திபாய் வடவேங்கடம்' என்று சொல்லத் தக்கனவாய்க் குரங்குகளின் நடமாட்டம் நிறைந்ததாய்க் காணப்படுகின்றன, வேட்டுவ மக்கள் எங்கும் நிறைத் வ.தி.-8