பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டாளும் திருவேங்கடமுடையானும் # 33 சொல்லுத போலவும் கேட்குத போலவும் சொல்லியாங் கமையும் என்மனார் புலவர்.? என்ற நூற்பாவின் பகுதியால் பேசுவன போலவும் கேட் பன போலவும் அமைத்துக் கோடல் கவிதை மரபாக `, :: : : : : ೩ಿ§r m இருந்து வருகின்றது. கற்பூரம் நாறுமோ (நாச், திரு. 7) என்று திருச்சங் காழ்வானோடு சொல்லாடிப் பொழுது போக்கின அன்னை ஆண்டாளுக்கு அது மறுமொழி தரவில்லை. எம்பெருமானது பிரிவால் அவள் ஆற்றாமை மீதுர்ந்து செல்லத் தொடங்குகின்றது. காலமும் கார் காலமாக உள் ளது. மேகங்களும் 'ஆழியுட்புக்கு முகந்து கொடு ஆர்த் தேறி, ஊழி முதல்வன் போல் மெய் கறுத்து, பாழியத் தோளுடைப் பற்பநாபன் கையில், ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து (திருப்-4) வந்து தோன்று கின்றது. கார்காலத்தில் தவறாது திரும்புவதாகக் கூறிப் போன எம்பெருமானின் திருவாக்கு அவள் நினைவிற்கு வருகின்றது. அப்படியே அவனும் மேகங்களுடன் வந் திருக்கக் கூடும் என்று நினைக்கின்றாள். மேகங்காள் எம்பெருமானும் உம்முடன் வந்தானோ!' என வினவு கின்றாள். அவை மறுமொழி தரவில்ல்ை அந்த எம்பெரு மானும் அவள் கண்ணுக்குத் தென்படவில்லை. ஆகவே, தன்னுடைய நிலைமையை எம்பெருமானுக்கு அறிவிக்க வேண்டுமென்று மேகங்களை இரக்கின்றாள். இந்தத் திரு மொழி முழுதும் மேகத்தைத் துதுவிடுவதாகச் செல்லு கின்றது. மேகங்களை நோக்கி, கண்ணிர்கள் முலைக்குவட்டிற் துளிசோரச் சோர்வேனைப் 2. தொல், பொருள். செய்யு. 192.