பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏帮食 வடவேங்கடமும் திருவேங்கடமும் அரண் செய்கின்றது. அது கூறுவது; 'பெரிய பெருமாள் திருவடிகளிலே திருவாய்மொழி ஆயிரமும் சொல்லிற்று. 'திருமோகூர்க்கு ஈத்தபத்து (திருவாய் 10.1:11) திரு வேங்கடத்துக் கிவைபத்து (டிெ-6.10:11) என்று பிரித் துக் பிரித்துக் கொடுத்த தித்தனை. பெருமான் திருப்பல கையில் அமுது படியிலே மற்றைத் திருப்பதிகள் நாயன் மார்க்கும் அளந்து கொடுக்குமாப்போலே என்று பிள்ளை (நம்பிள்ளை) அருளிச் செய்வர். இது நிற்க. Ο Ο Ο உடையவரின் முக்கிய சீடர்களுள்கள் ஒருவரான கூரத்தாழ்வானின் மக்கள் இருவர். ஒருவர் பராசரபட் டர்; மற்றொருவர் சீராமப் பிள்ளை. இவர்கள் ஒரு கரு இரட்டையர் (Identical twins). ஒரு சமயம் இருவரும் திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்க நேர்ந்தது. அப் போது பட்டரின் திருவாய்மொழி காலட்சேபம் நடை பெற்றுக் கொண்டிருந்தது. முந்நீர் ஞாலம் படைத்த (திரு வாய் 3.2) வந்தபொழுது சீராமபிள்ளை கேட்டார்: "ஆழ்வார் இப்போது பகவதாநுபவத்தை ஆசைப்பட்டி குந்தாராகில் அது ஒரு தேசவிசேஷத்தில் சென்று அது பவிக்க வேண்டியதாகையாலே இங்குக் கிடைக்கவில் லையே என்று துடிக்கலாம். இப்போதோ இவருக்குப் பரமபதம் விவட்சிதம் இல்லை. இராமகிருஷ்ணாதி அவதாரங்களில் அநுபவிக்க ஆசைகொண்டிருந்தாலும் அவை ஒரு கால விசேஷத்திலே கழிந்து விட்டனவே! என் றாவது துடிக்கலாம். இப்போது அவதாரங்களில் அநுப வாபேட்சை சென்றதாக இல்லாமையாலே அந்த துடிப் பிக்கும் அவகாசமில்லை. கீழே நடந்த திருவாய்மொழியே 1. திவ்வியார்த்த தீபிகை 7.2:11 இன் உரை. 2. இது தெற்குத் திருமலை எனப்படும். திருமாலி ருஞ்சாலை மலைபற்றியது.