பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடகோபன் சிந்தையில் திருவேங்கடம் 169. ஆயின், தெற்குத் திருமலையில் நிற்கின்ற நிலையை அநுபவிக்க நினைத்துப் பெறாமல் நோவுபட்ட இவரை வடக்குத் திருமலையில் நிற்கின்ற நிலையைக் காட்டிச் சமாதானம் செய்தபடி என்?’ என்னில்: முலைவேண்டி அழுத குழந்தைக்கு முலையைக் கொடுத்துப் பசியைப் போக்குதல் செய்வதுதானே? நன்று; இன்ன முலையைத் தரவேண்டும் என்று அழுதால் அம்முலையையே கொடுத்து ஆற்ற வேண்டாவோ?’ என்னில்: வேண்டா; இவர் தாம் வழி திகைத்து அலமர்கையாலே அதுவே வேணும்: அதுவன்று இது என்ற தெளிவில்லையாயிற்று இவர்க்கு. மற்றும் ஒரு பொருள்தானே ஒருபோது தாரகமாய்: மற்றைப்போது அதுதானே பாதகமாகக் காணா நின் றோம்; பசியில்லாத காலத்தில் பாதகமான சோறு தானே அது கழிந்தவாறே தாரகமாகா நின்றதே? ‘இவர்க்கு இன்னது இன்னபோது தாரகமாம்; இன்னது இன்னபோது பாதகமாம் என்று தெரியாது;குணங்களின் ஆவிஷ்காரத்தாலே (பிரகாசத்தாலே) த ப் பி த் து க் கொண்டு செல்லுகின்ற ஈசுவரனுக்கும் தரித்த இவருக்கும் தெரிவது இதுதான். மற்றும் மக்களுக்கு மட்டும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற நீர்மை அங்கு (அழகர் மலை); கானமும் வானரமும் வேடுமானவற்றுக்கு" முகம் கொடுத்த நீர்மையுண்டே இங்கு (திருமலை).? ஆழ்வார் சமாதானம் அடைந்த விதத்தை ஈட்டாசிரி யர் குறிக்கின்றார் இவ்வாறு: "தர்மி ஒன்றே ஆகையாலே விஷயம் எங்கும் ஒக்கல் பூர்ணமான பின்பு, ஒரு தேச விசேடத்தாலே சென்றால் செய்யக் கூடிய அடிமைகளெல் லாம் இந்நிலத்திலே செய்வதற்குப் பாங்காக இருக்கு மாகில், நமக்கும் இவ்வுடம்பு விரோதியாதலின்றி அடிமை 6. நான். திருவந். 47. 7. ஈட்டின் தமிழாக்கம் 3.2 முன்னுரை காண்க,