பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சடகோபன் சிந்தையில் திருவேங்கடம் H7 : கைங்கரியம் : திருவேங்கடமுடையான் திருவடிக ளிலே எல்லாத் தேசத்திலும் எல்லாக் காலத்திலும் எல்லா நிலைகளிலும் எல்லாவித அடிமைகளும் செய்யவேண்டும் எனப் பாரிக்கின்றார். ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்; தெழிகுரல் அருவித் திருவேங் கடத்து எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே (1) (ஒழிவு இல்-ஒய்வு இல்லாத வழு இலா-குற்ற மற்ற, அடிமை-கைங்கரியம்) என்பது பாசுரம். ஒழிவு இல் கீழ்க்கழிந்த காலத்தை மீட்க முடியாதாதலால், இதன் கருத்து யாதெனில்: "அந்தோ: கீழே வெகு காலம் வீணாய்க் கழிந்து விட்டதே என்கின்ற இழவுநெஞ்சில் படாதபடி அதனை மறந்து ஆனந்தமயமா கக் கைங்கரியம் பண்ணப் பாரிக்கின்றார்’ என்று கொன்ன வேண்டும். கீழ்க்கழிந்த காலத்திலிழவு நெஞ்சிற் படாத படி மறப்பிற்கையேயிறேயுள்ளது என்பது ஈடு. கழித்த காலத்தில் அடிமை செய்யமுடியாதாதலின் இனி மேலுள்ள காலம் எல்லாம் என்றே பொருள் கொள்ள வேண்டும் என்பது குறிப்பு. உடனாய்: காலமெல்லாம் எல்லாத் தேசங்களிலும் விடாதே தொடர்ந்து அடிமை செய்ய வேண்டும் என்ற பாரிப்பைக் காட்டுகின்றது. அர்ச்சாவ தாரப் பெருமான் புறப்பாடு கண்டருளிப் பல விடங் களுக்கும் எழுந்தருள்வது உண்டல்லவா? அவ்விடம் ஒன் றும் தப்பாமல் எங்கும் அடிமை செய்யப் பாரித்தலில் குறை இல்லை. மேலும் இளைய பெருமாள் பெருமாளுக் குப் படை வீட்டிலும் வனத்திலும் அடிமை செய்தாற் போலே என்று கொள்ளினும் இழுக்கவில்லை. மன்னி என் பதால் பெருமாளும் பிராட்டியும் திரையை வளைத்துக் கொண்டிருந்தாலும் படிக்கம், குத்து விளக்குப் போன்று