பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

贾器恶 வடவேங்கடமும் திருவேங்கடமும் தமன் றெழும் திரு வேங்கடம் தங்கட்குச் சமன்கோள் வீடு தருந்தடங் குன்றமே {7} | நமன்று-வணங்கி; எழும்.உய்விக்கும்; சமன் கொள்-ஒத்ததான, வீடு-மோட்சம்; கான்ற பாசுரப் பகுதியால் இதனை அறியலாம். திருமலை யாழ்வார் தம் திருமுடியிலே திருவேங்கடமுடையானை எழுந்தருளுவித்துக் கொண்டிருப்பதால், இது சாத்திய மாகும். திருமலைக்குச் சிறப்பு பரமபதநாதன் தன்னிடத் தில் வந்து தருளியிருத்தல், தமன்று-நம: என்று சொன்ன அளவிலே நமக்கு அந்தத் திருமலையாழ்வாரே வீடுபேற்றினை வழங்கிருள்வார் 'துயரறு சுடரடி தொழு தெழு (திருவாய் 1. 1:1) என்கின்ற தமது வாசனை அவர் கட்கும் உண்டு என்று இருக்கின்றார்,' என்பது ஈடு. (7). ‘எம்பெருமானுக்கு மிகவும் அடையத்தக்கதான திருமலைதான் தமக்கும் மிகவும் அடையத்தக்கதாகும். அது நமக்கு ஒரு பலனை அளிக்க வேண்டும் என்பதில்லை; ஒரு பலனையும் தாராதொழியினும் அதுவே நமக்கு அடையத்தக்கதாக இருக்கட்டும்' என்கின்றார். குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான்பரன் சென்று சேர்திரு வேங்கட மாமலை ஒன்று மேதொழ நம்வினை ஒயுமே (8) حية (ஞாலம்-பூமி, பிரான்-காப்பன், பரன்-எம்பெரு மான்; ஒயும்-தொலைந்திடும்; என்பது பாசுரம். இதில் விபவாவதாரங்களோடு, கிருஷ்ணாவதாரத்தோடும் (திரிவிக்கிரமாவதாரம்) அர்ச் சாவதாரத்தோடு (திருமலையப்பன்)வேற்றுமையில்லாமல் எஞ்ஞான்றும் மலையே இரட்சகம் என்று சாடுக்தியாக நம் ஆசாரியப் பெருமக்கள் அருளிச் செய்வார்கள்.