உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#86 வடவேங்கடமும் திருவேங்கடமும் என்னை உன் திருவடிகளில் சேரும்படி செய்தருள வேண் டும்' என்கின்றார். ‘உலகம் உண்ட பெருவாயா': ஆபத்து நேர்ந்த காலத்தில் தளராதபடி காப்பதற்காகவன்றே நீ உலகம் உண்டது. அந்த ஆபத்தில் காக்கும் தன்மை மெய்யா னால் என்னையும் அந்த ஆபத்தினின்றும் எடுத்தருளித் திருவடிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டாவோ?-என் பது குறிப்பு, பெறுவாயா: வாயின் பெருமையைச் சொன் னது அவனது பாரிப்பின் பெருமையைச் சொன்னபடி. "அடியேன் ஆருயிரே - திருமலையில் நின்று என் னுடைய சேஷத்துவமுறையை அறிவித்து உன்னால் அல்லது செல்லாதபடி பண்ணினவனே! குலதொல் அடியேன் குலபரம்பரையாக நான் உனக்கு அடிமைப் பட்டவனன்றோ? என்னை நீ நோக்காவிடில் வேறு தோக்குவாருண்டோ? கூறாய்': அ டி யே ன் உன் திருவடியைச் சேரும் வகைபற்றி ஒரு சொல் அருளிச் செய்ய வேண்டும். சரண்யனின் இரண்டாவது படி: கூடக் கடவீர்; அதற்கு ஒரு குறையும் இல்லை; ஆனாலும் தடைகள் கனத்து இருக்கின்றனவே என்று எம்பெருமான் கூற, "கேமி வலவா! உன் கையில் திருவாழி இருக்க நீ இப்படிச் சொல்லலாமோ? இரண்டு விபூதியையும் ஆளுவது நின் திருவாழியன்றோ? அழகாலே அங்குள்ளாரை ஆளும்; கூர்மையாலே இங்குள்ளாரை ஆளும். அங்குக் கூர்மை குமர் இருக்கும்; இங்கு அழகு குமர் இருக்கும். தெய்வக் கோமானே! எல்லாத் தெய்வங்கட்கும் மேம்பட்ட தெய்வம் நானே' என்பதைத் திருமலை யில் காட்டிக் கொண்டு நிற்பவனே. ஆரா அன்பில் அடியேன். ஆராக் காதல் குருகூர்ச் சடகோபன் அன்றோ? இப்படிப்பட்ட அடியேன். நின் திருவடிகளில் சேர்ந்து