உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼馨器 வடவேங்கடமும் திருவேங்கடமும் உள்ளது. தேவர்கள் உப்புச்சாற்றைப் பருகிக் களிப்பது போன்றதா இது? இங்குள்ள மற்றையோர்கள் அநுபவிப் பது போன்றதா என் அதுபவம்: அடியேனுடையது அசாதாரணமானதன்றோ? உ ட ேன இமையோர் அதிபதியே! என்றது. அங்குத் திருநாட்டில் தித்திய சூரிகள் உன்னை அதுபவிப்பதைப் போலன்றோ அடியேன் இங்கு உன்னை அநுபவிப்பது? "ஆழ்வீர்! திருமலைக்கு நீர்வந்து சேவித்துப் போக லாகாதா? இங்கனே கிடந்து துடிப்பானேன்?’ என்று எம்பெருமான் திருவுள்ளமாக, கொடியா அடுபுள் உடை யானே! என்கின்றார். பெரிய திருவடியை ஒக்கத்தில் இடுக்கிக் கொண்டு விரைந்தோடி அருள் செய்வது சிலருக் குத்தானா? அந்த அருளுக்கு அடியேன் தகுந்தவன் அல்லனோ? அந்தப் புள்ளரையனை என்னளவில் சிறிது செலுத்தக் கூடாதோ’ என்கின்றார். கோலக் கணிவாய்ப் பெருமானே: "அழகிய தாய்த் அணிந்துள்ள திருவதரத்தின் பழுப்பைக் கொண்டு என்னை அடிமைக் கொண்டாய்! அந்தத் திருவதரத்தை மீண்டு காட்டுதல் அரிதாயிற்றே!. "ஆச்ரிதர் இவ்வழகை அநுப விப்பதற்குக் கொடி கட்டிக் கொண்டிருப்பவைே!' என் பது நம்பிள்ளை ஈடு. செடியார் வினைகள் தீர்மருந்தே நிலத் தில் விளையும் மருந்தைக் காட்டிலும் மலையில் விளையும் மருந்து மிகச் சிறந்ததல்லவா? அதுவும், இது திருமலை மருந்து அன்றோ? 'ஆர் மருந்து இனியாகுவார்’ என் கின்ற இந்த ஆழ்வாருக்கு அசேதநமான மருந்து பிடிக் காது. எது மருந்து என்னாமல் ஆர்மருந்து என்பவரா கையாலே இவருடைய மருந்து சேததமாகவே இருக்க வேண்டும். நோய்களைத் தீர்க்கும் மருந்து உலகில் இருந்தாலும் நோய்கட்கு மூலகாரணமான வினை தீர் மருந்து இல்லையல்லவா? "இவன் மருத்துவனாய் நின்ற மாமணி வண்ணன்' (பெரியாழ். திரு. 5.3:6) அல்லவா?