பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxii 1980-ஆகஸ்டு முதல் திருப்பதி வாழ்வை நல்கினான் ஏழுமலையப்பன். திருப்பதி வாழ்வில் எனக்கு அறிமுக மாகிய நான்கு முக்கிய வைணவச்சீலர்களில் ஒருவர் திரு T.A. கிருஷ்ணமாச்சாரிய சுவாமிகள். தமிழர்கட்கு இரு கண்களாகத் திகழும் தமிழிலும் வடமொழியிலும் முறையே வித்துவான், சிரோமணி பட்டங்கள் பெற்றவர். திருவேங்கடவன் கீழ்த்திசை மொழிக் கல்லூரியில் 1945 முதல் பல்லாண்டுகள் வடமொழிப் பேராசிரியராகப் (நியாயப்பிரிவு) பணியாற்றி ஓய்வு பெற்றவர். கோவிந்த ராஜ சுவாமி சந்நிதி வீதியில் சொந்த இல்லத்தில் வாழ்ந் திருந்தவர். 1976 ஆகஸ்டில் (அடியேன் ஒய்வு பெற்ற தற்கு ஓராண்டிற்கு முன்னதாக) ஒய்வு பெற்றவர். ஒய்வு பெற்றபின் சில ஆண்டுகள் திருவரங்கத்தில் வாழ்ந்து பெரிய பெருமாளைச் சோவித்துக் கொண்டும் சில ஆண்டுகள் திருப்பதியில் வாழ்ந்து சீநிவாசனையும் கோவிந்தராசனையும் சேவித்துக் கொண்டும் இருந்து தற்சமயம் காஞ்சிவரதசாசர் சந்நிதிற் தெருவில் {76. எண் இல்லம்) வாழ்ந்து கொண்டு வரதனைச் சேவித்துக் கொண்டும் இருப்பவர். பகவத் விஷயத்தைச் சிலருக்குப் பாடம் சொல்லி ஈட்டுரையில் திளைப்பவர். எழுபது அகவை நிறைந்த (1992 இல்) இந்தச் சான்றோரின் தொடர்பு அடியேனுக்கு ஏற்பட்டது ஏழுமலையானின் திருவருளாலேயே என்பது அடியேனின் நம்பிக்கை. புலமை மிக்க பலர் தொடர்பு ஏற்பட்டிருந் தாலும் சிலர்தாம் சான்றோராக அமைந்திருக்கின்றனர். திரு. கிருஷ்ணமாசாரிய சுவாமிகளிடம் அடியேன் ஈர்க்கப் பட்டதற்கு அவர்தம் பக்தி நிறைந்த இலக்கியப் புலமை, புரையறக் கலக்கும் பாங்கு, எளிமையுடன் அன்பர்களை அணைக்கும் அருமை ஆசியவையே காரணங்களாகும். இவரிடம் பழகும்போது சத்விஷயங்களைத் தவிர, பிற வற்றில் உள்ளம் தோய்வதில்லை என்ற உயர் பண்பைக் காணலாம். "மறந்து புறந்தொழா மாந்தராக இருந்