பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邀慕莎 வடவேங்கடமும் திருவேங்கடமும் சமஸ்கிருதம் ஆதியில் திருவேங்கடமலைக்கு வடபுறத்தி இள்ள பல பகுதிகளில் மிகுதியாக வழங்கி வந்ததாதலின் அது 'வடமொழி என்று வழங்கப்பெறுகின்றது. அங்ங் ேைம, அம்மலைக்குத் தென்புறத்தில்-தமிழகத்தில்-வழங்கி லரும் தமிழ்மொழி தென்மொழி எனப்படுகின்றது. இந்த இரண்டு மொழிகளும் மிகுதியாக வழங்கும் நிலங் களுக்கு இடையே நின்று எல்லை குறிப்பதனால் திருவேங் கடமலையை வட சொற்கும் தென்சொற்கும் வரம் பிற்று' என்கின்றான் கவிஞன். "வடவேங்கடம் தென் குமரி ஆயிடைத் தமிழ் நூறு நல்லுலகம்’ என்ற தொல் காப்பியச் சொற்றொடரில் திருவேங்கட மலையைத் தமிழ் உலகத்திற்கு வட எல்லையாகக் குறிப்பிட்டுள்ள தைக் காணலாம். பிற்காலத்தார் திருவேங்கடத்தையே வடவேங்கடமாகக் கொண்டு பாடல்களை இயற்றியுள்ள னர். நான்கு வேதங்களிலும் அவ்வேதங்கட்கு உபபிரும ணமாகிய இதிகாசம், புராணம் முதலிய மற்றைய நூல் களிலும் எடுத்துக் கூறப்படும் பொருள்களாகிய கடவுளர் யாவரினும் சிறந்த முழுமுதற் கடவுளான திருமாலைத் தன்னிடத்தில் கொண்டுள்ளது. இது என்பது நான்மறை யும் மற்றை நூலும் இடைசொற்ற பொருட்கெல்லாம் எல்லையது' என்பதன் கருத்து என்பது அறியத் தக்கது. இந்த மலையின்கண் அறங்களெல்லாம் குறைவின்றி நிறைந்துள்ளன என்பதை நல்லறத்தின் ஈறு என்ற சொற் றொடரால் குறிக்கின்றான் கவிஞன். இதற்குச் சமான மாக உடன் எடுத்துச் சொல்லத்தக்க மலை வேறொன்றும் இல்லையென்ற கருத்தை வேறு புடைசுற்றும் துணை யின்றி என்ற தொடர் விளக்குகின்றது. இவ்வுலகில் ஒருவரது பூத உடம்பு அழிந்தாலும் புகழ் உடம்பு அழி யாது நிற்கும் என்று அறிஞர்களால் கொண்டாடப்பெற் 1. வடவேங்கடம் வேறு, இன்றைய திருவேங்கடம் வேறு என்பதை இந்நூலில் பிறிதோரிடத்தில் (கட் டுரை-2) விளக்கப்பெற்றுள்ளது.