பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்ககால (வட) வேங்கடம் - (1) . 13 இதில் தலைவன் தலைவியுடன் இருத்தலால் விழாக் கொண்ட ஊரினர் மகிழ்வதைப்போல அவள் மகிழ்கின் றாள் என்ற குறிப்பினைக் காணலாம். 'இலங்குவளை நெகிழச் சாஅ யானே உளனே வாழி தோழி சாரல் தழையணி அல்குல் மகளி ருள்ளும் விழவுமேம் பட்டவென் நலனே’’ -குறுந்- 125 மேற்கூறிய கருத்து இப்பாடவிலும் வருதல் காண்க. இங்ங்னம் ஊர்கள் ஆண்டுதோறும் விழாக்களுடன் பொலிந்தனவாகக் கூறுதல் சங்கப் பாடல்களின் மரபா கத் திகழ்வதைக் காணலாம். அகநானூற்றில் வரும், 'அழியா விழவின் அஞ்சு வரு மூதூர்' -அகம்-115 (அழியா விழவு-என்றும் நீங்காத விழா) என்ற அடியும், புறநானூற்றில் வரும் 'மடியா விழவின் யாணர் நன்னாட்டு’ (மடியா = நீங்காத) என்ற அடியும் ஆண்டு முழுவதும் விழா நீங்காத ஊர் என்று குறிப்பிடுதலைக் காணலாம். இந்த விழாப்பற்றிய குறிப்பு, வேறுவே றுயர்ந்த முதுவாய் ஒக்கல் சாறு அயர் மூதூர் சென்றுதொக் காங்கு' -பட்டின-அடி 214-215