பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I4 வடவேங்கடமும் திருவேங்கடமும் (சாறு-விழா ! என்று பட்டினப் பாலையிலும், நீறு அடங்கு தெருவின் சாறு அயர் மூதூர் -சிறுபாண்-அடி-201 என்று சிறுபாணாற்றுப்படையிலும் வருகின்றது. சிற்றுார் களும் விழாவினால் பொலிந்தனவாகக் குறிப்புகள் _# ಛ# ಕಿ • 'விழவும், அகலு ளாங்கண் சீறுார்' -புறம்-65 என்ற புறப்பாட்டுக் குறிப்பினையும் காண்க. ஒவ்வோர் இல்லமும் விழவுடன் பொலிந்ததாகவும் குறிப்பு உள்ளது.

  • மாடந் தோறும் மைவிடை வீழ்ப்ப நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே'

-புறம்-33 (மைவிடை-செம்மறிக்கிடா) என்பதனால் இதனை அறியலாம். இங்ங்னம் இல்லந் தோறும், ஊர்தோறும், நாடு முழுவதும் விழாக்கள் மலிந் திருந்த செய்தியைச் சங்கப் பாடல்களில் காணலாம். எனவே, விழா பற்றிய குறிப்பு வேங்கடத்திற்கு மட்டி லும் சிறப்பாக அமையவில்லை என்பதனை அறிய வேண் டும். அன்றியும், பேராசிரியர் அய்யங்கார் அவர்கள் காட் டிய பாடலில் (அகம்-61) இவ்விழாக்கள் சமயச் சார்பு டையவை என்பதற்கு யாதொரு சான்றும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, சங்க காலத்தில் சமயத்தின் அடிப்படையாகவோ வேறு காரணம் கருதியோ திருப்பதி