உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. (வட)வேங்கடத்தை ஆண்ட அரசர்கள் வேங்கடப் பகுதியை ஆண்ட அரசர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் காணப்பெறும் ஒரு சில குறிப்பு களால் அறிந்து கொள்ள முடிகின்றது. எட்டுத் தொகை நூல்களாகிய அகநானுாற்றிலும் புல்லி என்ற ஓர் அரசன் குறிப்பிடப் பெறுகின்றான். பத்துப்பாட்டில் ஒன்றாகிய பெரும்பாணாற்றுப் படையாலும், அகநானூற்றாலும் திரையன் என்ற ஒர் அரசனைப் பற்றிய செய்திகள் கிடைக் கின்றன புறநானூறு ஆதனுங்கன் என்ற ஓர் அரச குறிப் பிடுகின்றது. இந்த மூன்று அரசர்களைப்பற்றியும் சங்க நூல்களில் அறியக்கிடக்கும் செய்திகளைக் கோவைப் படுத்தி ஒரு வரலாறு காண முடிகின்றது. புல்லி. இவன் தமிழகத்தின் வட எல்லையாக விளங்கும் வடவேங்கடத்தையும் அதனைச் சூழ்ந்த நாடுகளையும் ஆண்ட ஒர் அரசன். புல்லி ஆண்ட நல்ல நாட்டைக் கடந்தால் வடுகு மொழி வழங்கும் வடுகர் நாடு வந்துறும் என அறியக்கிடப்பதால், தமிழகத்தின் வடஎல்லையைக் காத்து நின்றவன் இப்புல்லி எனக் கூறுதல் தவறாகாது. 'புடையலம் கழற்கால் புல்லி குன்றத்து நடையரும் கானம் விலங்கி நோன் சிலைத் தொடையமை பகழித் துவன்றுநிலை வடுகர்

  • சப்தகிரி (செப்டம்பர்-1988)யில் வெளிவந்தது.