பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岛登 வடவேங்க.மும் திருவேங்கடமும் யும்; நியமம்-அங்காடி, நறவுகள்: கொடைவிற்கும்; புதவுமுதல்-வாயில்). என்ற கல்லாடனார் பாட்டால் இதனை யறியலாம். வீரர்களின் செயலோடு வீரர்களின் தலைவனாகிய புல்லியின் செயலையும் அறிந்து கொள்ள விழைவது இயல்பேயன்றோ மாமூலனார் கூறுவதைக் கேட்போம்: 'உருமெனச் சிலைக்கும் ஊக்கமொடு பைங்கால் வரிமாண் நோன்ஞான் வன்சிலைக் கொளி.இ அருநிறத் தழுத்திய அம்பினர் பலருடன் அண்ணல் யானை வெண்கோடு கொண்டு நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயரும் கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான் மழபுலம் வயக்கிய மாவண் புல்லி' -அகம்-61 |உரும்-இடி, சிலைக்கும்-ஒலிக்கும்; நோன்ஞாண். வலிய நிாண்; வன்சிலை-வ்லியவில்; நிறம்-மார்பு; அண்ணல்-தலைமை வாய்ந்த கோடு-கொம்பு; நறவுகள்; நொடை-விற்ற, நாள் மகிழ் அயரும்நாளோலக்கச் சிறப்புச் செய்யும்; மழபுலம்-மழ வரது புலம், வீரர் பலருடன் புல்லி கானகம் சென்று களிறு வேட் $$.. ಓ.!f7 ಓಟ್ಲಿ..? அ வ ற் றி ன் .ெ வ ண் கோ டு க ைள க் கொணர்ந்து அககோடுகளையும் அவற்றை விற்றுப் பெற்ற நெல்லையும் நாளவைக்கண் தன்னைப் பாடி வரும் பரிசிலர்க்கு ஈந்து இன்பம் அடைவான். இங்ங். னம் இவர்களது செயலால் பிடியினை இழந்த களிறும், களிற்றினை இழந்த பிடியும் அழுது கூப்பிடும் பேரொலி அம்மலையகத்தே மாறாது ஒலிக்கும் ஒன்று. புலவர்கள் அவனது நாட்டைப் புகழ்ந்து பேசுவர் (நற்றிணை-14).