பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(வட) வேங்கடத்தை ஆண்ட அரசர்கள் 墨蓬 கொண்டிருக்கும் பகுதியே ஆதனுங்கன், புல்லி முதலா யினோர் இருந்து நகர் அமைத்து வாழ்ந்த இடம் என்று கருதலாம். சங்கச் சான்றோர். காலத்துக்குப் பின்னும் இளங்கோ அடிகள் காலத்துக்கு முன்னுமாகிய இடைக் காலத்தில் இவ்விடத்தில் திருமால் கோயில் எழுந்தது என்று கருதவும் இடம் உண்டு. வேங்கடம் இன்றும் அழகிய சிறுசிறு அருவிகளால் பொலிவது போலப் பண்டும் சிறந்து விளங்கியது. கல்விழி அருவி வேங்கடம்" (புறம்-389) என்ற ஆத்திரையனார் கூற்றால் இதனை அறியலாம். வீங்குநீர் அருவி வேங்கடம் (சிலம்பு-11:41) என்று இளங்கோ அடிகளும் கூறுவர். இவன் இரவலர் இன்மை தீர்க்கும் இனிய உள்ளம் படைத்தவன். கள்ளில் ஆத்திரையனார் என்னும் தொண்டை நாட்டு நல்விசைப் புலவர் ஒருவர் இளையராய் இருந்த காலத்தே இவனைச் சென்று கண்டார். தன்பால் வந்த புலவரை ஆதனுங்கன் அன்புடன் வரவேற்று அருகில் இருத்தி, பிள்ளைப் பொருந கோடை முற்றிவற்கடம் உற்ற வறுமைமிகு காலத்தே, உறு பொருள் ஈந்து உற்ற துயர் தீர்ப்பாருள் அடியேனையும் ஒருவனாக உள்ளுவாயாக’ (புறம்-389) எனச் சொல்லி, வேண்டுவன நல்கினன் என்பது வரலாறு. ஆதனுங்கனின் அருங்குணத்தை ஆத்திரையனார் நன்கு உணர்ந்து அவனைத் தம் உள்ளத்தே வைத்துப் போற்றுவாராயினர். அவனை மறப்பதும் அவருக்கு அரிதாயிற்று. ஒரு சமயம் ஆத்திரையனார் தமது ஊரா கிய கள்ளிலை விட்டு வேங்கடத்திற்குச் சென்று ஆதனுங் கனைக்கண்டு அளவளாவியிருந்தார். இருவரும் சொல் லாடுகையில், ஆத்திரையனார் தமக்கு ஆதனுங்கன்பால் உள்ள அன்பினை எடுத்தோத வேண்டிய நிலை உண்டா யிற்று. அவர், 'எந்தை வாழி ஆத னுங்கவென் நெஞ்சத் திறப்போர் நிற்காண் குவரே