பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 வடவேங்கடமும் திருவேங்கடமும் நின்னியான் மறப்பின் மறக்குங் காலை என்னுயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும் என்னியான் மறப்பின் மறக்குவென்’ -புறம்-175 என்று பாடிப் போற்றினார். ஆண்டுகள் பல உருண்டோடின. ஆதனுங்கனும் மீளா உலகம் புக்கான். இதனை அறிந்து வேங்கடஞ் சென்ற ஆத்திரையனார் அவன் நாட்டை அவன் வழித்தோன்ற லாகிய நல்லோர் முதியன் என்பான் ஆண்டு வருதலைக் கண்டார். அவன் முன்னோன் ஆதனுங்கன்பால் தான் இளைஞனாய் இருந்த காலத்தில் வந்தமையும், அப்பொழுமு ஆதனுங்கன் தன்பால் காட்டிய அன்புடை மையையும் எடுத்துக் கூறி, "ஆத னுங்கன் போல நீயும் பசித்த ஒக்கல் பழங்கண் வீட வீறுசால் நன்கலம் நல்குமதி பெரும’ -புறம்-389 என்று போற்றினான். மேலே குறிப்பிட்ட மூன்று அரசர்களும் நீண்ட எல்லை யாக இலங்கும் வேங்கடத்தின் வெவ்வேறு பகுதிகளை ஆண்டதாக அறியக் கிடக்கின்றது. ஒரு சில சங்கப் பாடல்களாலும் கல்வெட்டுகளாலும் மூவரில் ஒருவர் கிழக்குப் பகுதியையும், மற்றொருவர் மேற்குப் பகுதியை யும், பிறிதொருவர் நடுப்பகுதியையும் ஆண்டதாகக் கருதலாம். துங்கன் என்ற பெயரையும் பட்டத்தையும் உடைய அரசர்கள் கிருஷ்ணை நதிக்கருகிலுள்ள பகுதியைப் பதினான்காவது பதினைந்தாவது நூற் றாண்டுகள் வரை ஆண்டதாக அறிகின்றோம். பதி னான்காம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டொன்று துங்கதேவ மகாராயர், நுங்கராயர் என்ற இரண்டு அரசர்