பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(வட) வேங்கடத்தை ஆண்ட அரசர்கள் 43 களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றது. பதினைந்தாவது நூற்றாண்டைச் சார்ந்த மற்றொரு கல்வெட்டு வீர துங்கன் என்ற பெயரையுடைய அரசன் ஒருவன் பிரகாசம் மாவட்டத்தைச் சார்ந்த ஒங்கோல் வட்டத்திலுள்ள கணு பார்த்தியினை ஆண்டதாகக் குறிப்பிடுகின்றது (புறம்389 ஒளவை. சு. துரைசாமி பிள்ளை உரை காண்க). அகநானுாற்றுப் பாடலால் (அகம்-340) பவத்திரி என்னும் ஊர் கூடுருக்கு அருகில் உள்ளதாக அறியக் கிடக் கின்றது என முன்னர்க் குறிப்பிட்டேன். மேலும் நெல்லூர்க் கல்வெட்டுகளால் பவத்திரி என்னும் ஊரைக் கடல் கொண்டது என்றும், அது கடல் கொண்ட பவத்திரி கோட்டம்' என்ற கல்வெட்டுச் சொற்றொட ரால் அறியக் கிடக்கின்றது என்பதையும் அறிய முடிகின் றது. இந்தக் கடல்கோளுக்குப் பிறகு திரையன் தன் தலைநகரைக் காஞ்சிக்கு மாற்றிக் கொண்டான் என்பது தெளிவாகின்றது. காஞ்சி மாநகர் இளந்திரையனின் தலைநகராக இருந்தது என்பதனையும், அது வட நாட்டி லுள்ள நாலாந்தா, தட்சசீலம் போன்று பல்கலைக் கழகங்களைக் கொண்டிருந்தது என்பதனையும் நாம் அறிவோம். புல்லி என்பான் வேங்கடத்தின் மேற்குப் பகுதியை ஆண்டிருத்தல் கூடும். இப்பகுதி பாண்டியர் அரசாண்ட பகுதிக்கு மேற்பகுதியாக அமைந்திருந்தது என்பது அடியிற் கண்ட சங்கப் பாடல்களின் பகுதிகளால் அறியக் கிடக்கின்றது. "செந்நுதல் யானை வேங்கடம்’ - அகம்-265