பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

荔逻 வடவேங்கடமும் திருவேங்கடமும் சார்பு பற்றியதேயாகும். இடைக் காலத்தில்தான் இது திருத்தலப் பயணிகளின் முக்கிய இடமாக அமைந்தது. சங்க காலத்தில் இச்சமயச் சார்பு இவ்விடத்திற்கு ஏற்பட இ. இத்தகைய சார்பு ஏற்பட்டது பிற்காலத்தில் தான். ஆயினும் திருப்பதிபற்றிய சமயச் சார்பான குறிப்பு புறப்பொருள் வெண்பா மாலையிலும் சிலப்பதி காரத்திலும் காணிப்பெறுகின்றது. இவையே முதன் முத லாகக் கூறப்பெறும் மிகப் பழைய குறிப்புகளாகக் கருத &# is , முதலில் ஐயனாரிதனார் வாக்கினைக் காண்போம். வெறிகொள் அறையருவி வேங்கடத்துச் செல்லின் நெறிகொள் படிவத்தோய் நீயும்-பொறிகட்(கு) இருளியும் ஞாலத்(து) இடரெல்லாம் நீங்க அருளியும் ஆழி யவன்' (வெறி-வாசனை: அறை-ஒலிக்கும்; நெறி. ஒலிக்கும்; நெறிமுறைமை) என்ற பாடலல் வேங்கடம் குறிப்பிடப்பெற்றிருப்பது டன் அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் திருவாழி யைத் தரித்துக் கொண்டிருக்கும் குறிப்பும் ஆழியவன்' என்ற சொல்லால் காட்டப்பெற்றிருத்தல் நோக்கத் தக்கது. சிலம்பின் குறிப்பு: சிலப்பதிகாரத்தில் வரும் வேங் கடம் பற்றிய குறிப்பு இது: இந்தக் காவியத்தில் வரும் மாங்காட்டு மறையோன் திருத்தலப் பயணம் செய்து வரு கின்றான். உறையூரையடைந்த கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளுடன் வைகறையாமத்து அவ்வூரைக் கடந்து 3. புறப்பொருள் வெண்பாமாலை-பாடாண்படலம் -புலவர் ஆற்றுப்படை(23) உதாரணச் செய்யுள்.