பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய திருவேங்கடம் 53 தென் திசையை நோக்கிச் செல்லுபவர்கள், கனன்று எழும் கதிரவன் வெப்பத்தைப் பொறுக்கலாற்றாது வழி யில் ஒரு மருதநிலப் பரப்பில் வனப்புற்றுத் திகழாநின்ற ஒர் இளமரக்காவில் திருத்தலப்பயணிகள் தங்குவதற் கென்று அமைக்கப் பெற்றிருந்த இருப்பிடத்தில் இளைப் பாறுதற் பொருட்டுச் சென்று புகுகின்றனர். அப்பொழுது தென்திசையினின்றும் வடதிசை நோக்கிச் செல்லும் மறையோனும் அவ்விடத்தில் வந்து புகுகின்றான்; வருகின்றவன், தீது தீர் சிறப்பின் தென்னனை’ வாழ்த்திக் கொண்டே வருகின்றான். அங்ஙனம் வருகின் றவனைக் கோவலன், 'யாது நும்மூர்? ஈங்கென் வரவு?" என்று வினவுகின்றான். இந்த இரண்டு வினாக்களில் முன்னதினும் பின்னது சிறப்புடையதாகலின் அதற்கு விடைகூறும் இடத்தில் திருவரங்கம், திருவேங்கடம் இவற் றின் வருணனைகள் வருகின்றன. அவை, 35 நீல மேக நெடும்பொற் குன்றத்துப் பால்விரிந் தகலாது படிந்தது போல ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறல் பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்து விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித் 40 திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும் வீங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்குயர் மலையத்து உச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி இருமருங் கோங்கிய இடைநிலைத்தானத்து 4. சிலம்பு - காடுகாண் - அடி-32