பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岳登 வடவேங்கடமும் திருவேங்கடமும் 45 மின்னுக் கொடியுடுத்து விளங்குவிற்பூண்டு நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி நலங்கிளர் ஆரம் மார்பில் பூண்டு 50 பொலம்பூ ஆடையில் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் என்கண் காட்டென்று என்னுளம் கவற்ற வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்5 |குன்றம்-மலை; பால் விரிந்து பக்கங்களில் விரிந்து; விரிந்து-படம் விரிந்து, திறல்-ஆற்றல்; திரை அலை; துருத்தி - ஆற்றிடைக் குறை (அரங்கம்), கிடந்த வண்ணம் - அறிதுயில் கொண்டு கிடக்கின்ற அழகு, வீங்குநீர் - மிகவும் பெருகி விழாநின்ற நீர், மின்னுக்கொடி - மின்னலாகிய புத்தாடை பகை அண்ங்கு - பகைவரை வருத்துகின்ற; ஆழி-திருவாழி: பால் வெண்சங்கம்பால் நிறத்தினையுடைய சங்கு; நலம்-அழகு ஆரம்-கெளத்துவ மணிமால்ை; பொலம்பூ ஆடை பொற்பூ ஆடை, நெடியோன்திருநெடும்ால், நின்ற வண்ணம் - நின்ற திருக் கோலம்; இவற்றைத் தவிர, இதே காவியத்தில் வேறு இரண்டு இடங்களில் வேங்கடத்தைப் பற்றிய குறிப்பு காணப் பெறுகின்றது. 'நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும் தமிழ்வரம் பறுத்த தண்புனல் நல்நாட்டு’’’ என்றும், 5. சிலம்பு - காடுகாண் - அடி 35-53 6. டிெ வேனிற்காதை அடி-1-2