பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய திருவேங்கடம் 55 வேங்கட மலையும் தாங்கா விளையுள் காவிரி நாடும்' என்றும் வருதலைக் காணலாம். உறையூர் காவிரியின் தென்பால் உள்ளது. திருபாணாழ் வார் திருவவரித்த திவ்விய தேசமாகும் இது. உ!ை யூருக்கு தேர் வடக்கில் காவிரி நதியின் வடகரையில் திரு வரங்கம் என்னும் திருப்பதி உள்ளது. கொண்டல் வண்ணனைக் கோவல னாய்வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை அண்டர் கோன் அணி யரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்(று)ஒன்றினைக் காணாவே -அமலனாதி- 10 என்று பாண்பெருமாள் அதுபவித்த பெரிய பெருமாள் எழுந்தருளியிருக்கும் தி வ் வி ய தேசமாகும் இது. உள்ளத்தை உருக்கும் நிகழ்ச்சியொன்று இப்பொழுது நம்மனத்தில் எழுந்து நம்மைத் தன்னிலை கெட்டழியச் செய்கின்றது". கோதண்டப்பானியிள்ளையின் கருத்து: மேற் குறிப்பிட்ட வருணனையைக் குறித்து இராவ்சாகிப் கோதண்டபாணிப் பிள்ளையின் ஆய்வுக் குறிப்பு இது: “இந்தத் திருவரங்கத்திற்கு மிக அண்மையிலுள்ளதும், தான் தங்கியிருந்ததுமான உறையூரிலுள்ள மாங்காட்டு மறையோன் திருவரங்கத்தை விரித்துக் கூறுவது மிகவும் பொருத்தமேயாகும். இங்குத் திருவரங்கத்தைப் பற்றி 7. டிெ கடலோடு காதை அடி-31-32 8. திருப்பாணாழ்வார் இறைவனோடு க ல ந் த வரலாறு.