பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

婚翁 வடவேங்கடமும் திருவேங்கடமும் .بے سے ہمہ--- அவன் கூறிய செய்தி ஆறு வரிகளில் மிகச் சுருக்கமாக உள்ளது. ஆனால், அவன் இன்னும் நேரில் கண்டறியாத வேங்கடத்தைப் பற்றிய குறிப்புகள் சற்று விரிவாகப் பதினொரு அடிகளில் கூறப் பெற்றுள்ளன. கோவலன் பூம்புகாரில் வாழ்ந்த பெருவணிகன். திருவேங்கடம் மலைநாட்டை விடப் பூம்புகாருக்கு மிகவும் அண்மையி லுள்ளது. ஆதலின் அவன் வேங்கடத்தைப் பற்றி நன்கு அறிந்திருத்தலும் கூடும். மிகத் தொலைவில் மலை நாட்டிலுள்ள மாங்காட்டு மறையோன் அறிந்திருப்பதை விடக் கோவலன் திருவேங்கடத்தைப்பற்றி நன்கு அறிந் திருத்தல் கூடும் என்று கருதுவதில் தவறு ஒன்றும் இல்லை, இஃது அறிவுக்குப் பொருத்தமான ஊகமே யாகும். அதுவும் இன்று திருப்பதி புகழ் அடைந்திருப்பது போல் அன்றும் அனைவருக்கும் தெரிந்துள்ள ஊராக இருந்திருப்பின் கோவலன் இந்த ஊரைப் பற்றி நன்றாகவே அறிந்திருப்பான் என்றும், அதுவும் தமிழகத் தின் வடஎல்லையின் முக்கியமான ஓர் இடம் என்று அறியும் அளவுக்குத் தெரிந்திருப்பான் என்றும் கருதுவது இந்த ஊகத்தை மேலும் வலியுறச் செய்கின்றது. திருப்ப திக்கு நேரில் சென்று அதனைக் கண்டறியாத மாங்காட்டு மறையோன் அவ்வூரைப்பற்றி ஒரளவு நன்கு அறிந் திருக்கக்கூடிய கோவலனுக்கு மிக விரிவாக அத்திவ்விய தேசத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் திரு மேனியை நேரில் கண்டதுபோல் விவரமாகக் கூறுவது பொருத்தமாகத் தோன்றவில்லை. இது கொல்லத் தெரு வில் ஊசி விற்கும் கதை போன்றதாக நினைக்கவும் தூண்டுகின்றது.' மேலும் அந்த அறிஞர் கூறுவது: "காவியப் போக் கினைக் கவனித்தாலும் வேங்கட்ம் ப்ற்றிய குறிப்பு காவிய 9. வடவேங்கடம் என்ற தலைப்பில் வந்துள்ள egíôává &LiG)6)Jüíôù (Tamii Culture - Voi. IX No. 1, Jan.-March-1961)