பக்கம்:வடவேங்கடமும் திருவேங்கடமும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய திருவேங்கடம் 57 நிகழ்ச்சியுடன் எவ்வாற்றானும் பொருந்துமாறு இல்லை. இக் குறிப்பு நிகழ்ச்சிகளுடன் இணையாமல் தனியாகக் கிடப்பதனால் இஃது இடைச் செருகலாகவும் இருத்தல் கூடும். வேங்கடத்திற்கும் அங்கு எழுந்தருளியிருக்கும் மூர்த்திக்கும் புகழ் தேடுவதற்காகவே யாரோ ஒருவரால் மேற்கொள்ளப்பெற்ற திட்டம்போல் தோன்றுகின்றது. பெருங்கவிஞராகிய இளங்கோவடிகள் தம்முடைய சமயப் பொதுநோக்கைப் புலப்படுத்திக் கொள்வதற்காகவே இப்படிச் சேர்த்திருப்பார் என்று கொள்வதற்கில்லை; அப்படிக் கொண்டாலும் திருவரங்கம் என்ற வைணவ தலத்தைக் குறிப்பிடுவதனாலேயே அக்குறிக்கோள் நிறைவு பெற்றுவிடும்' என்பது. இன்னும் அவர் கூறுவது : திருவரங்கத்தை வருணிக் கும் பகுதியில் ஈற்றடியாகிய திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்’ என்பதிலுள்ள உம்மையை நீக்கியும், திருவேங்கடம், அங்கு எழுந்திருளியுள்ள மூர்த்தி இவற்றின் வருணனையை முற்றிலும் நீக்கியும் படித்தால், 40 திருவமர் மார்பன் கிடந்த வண்ணம் 5.2 என்கண் காட்டென்று என் உளம் கவற்ற 53 வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன் என்பதாக அமைந்து, பொருளும் பாட்டின் அமைப்பும் கெடாது போருந்தும் என்று கூறித் திருவேங்கடத்தைப் பற்றிய வருணனை முற்றிலும் இடைச்செருகலே என்று பின்னும் வற்புறுத்திச் செல்வர். பின்பழகிய பெருமாள் சீயர் அருளிய ஆறாயிரப்படி குரு பரம்பரையிலும், இராமதுசரின் திவ்விய சூரி சரிதையிலும் காணப்பெறும் உடையவர் காலத்தில் திருமலையில் நிகழ்ந்த சைவ சமய வாதத்தைப் பற்றிய குறிப்புகளை எடுத்துக் காட்டி இந்தச் சூழ்நிலையில் திருமலையை வைணவத் தலம்