பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என மறுத்துவிட்டு, அவ்விடம் விட்டு அகன்றுவிட்டான். சேரலாதன் செய்வதறியாது திகைத்து நின்று விட்டான். அப்போது ஆங்கு வந்து சேர்ந்து, சேரலாதன் நிலைகண்ட புலவர், உள்ளுக்குள்ளாகவே மகிழ்ந்தார் ஆயினும், அவனை எள்ளி நகையாடலாயினர்.

"சேரலாத உன் கை, நின்னிடம் வ ந்து பொருள் வேண்டி நிற்கும் இரவலர்க்கு, அவர் விரும்பும் பொருள் கொடுக்கக் கவிழுமே அல்லது, பிறர்பால் சென்று பொருள் இரக்க மலராது எனப் பிறரெல்லாம் கூறக்கேட்டுள்ளேன்;அதுபொய் எ ன் ப ைத க் கண்ணெதிர் கண்டுவிட்டேன்; பிறர்பால், அதிலும் உன் மனைவியால், பொருள் வேண்டிஅதுவும், பொன்னும், நவமணியும அன்று: ஒருசிறு குவளை மலர் வேண்டி, இருகை விரித்து இரந்து நிற்கின்றன; ஈ என இரத்தல் இழிந்தன்று" என்ப: அது செய்து இழிந்தவன் ஆகிவிட்டன:"எனக்கூறுவதன் மூலம். சேரலாதன், தன் அரசமாதேவிபால் காட்டும் அன்புப் பெருக்கை அறிய வைத்திருக்கும் திறம், அகத்திற்கு இன்பம் அளிக்கவல்ல. தாதல் அறிந்து மகிழ்தற்கு உரித்து;

அம்மட்டோ!புலவர், அவனே ஒரு முறை எள்ளி நகையாடியாது போதாது என உணர்ந்து, மீண்டும் நகையாடத் தொடங்கி, "சேரலாத சிறந்த வீரன் சேரலாதன்: பகைவர்களின் பற்றற்கரிய கோட்டைகளையெல்லாம் வென்று கைக்கொள்ளும் வீறுடையான்" என்றெல்லாம் நின்னை புகழக் கேட்டுள்ளேன்; அதுபொய் என்பதையும் கண்டு கொண்டேன். உன்மனைவியால் இரு க்கு ம் ஒரு குவளை மலரைக் கேட்கிருய் நீ; அவள் அதைத் தர மறுக்கிருள். மனைவி கையில் உள்ள சிறுகுவளை மலரைக் கைப்பற்ற முடியவில்லை உன்னுல்; பகைவர் கோட்டைகளை எவ்வாறு கைப்பற்றுவாய்?" எனக்கேட்டு எள்ளி நகையாடினர்.


13

13