பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகம், நிலஉலகில் இடம் பெற்றிருக்கும் நிலையாலும் தைமுதல் ஆனிவரையான காலத்தில் பகற்போது குறைந்து இரவுப்போது மிக்கு இருப்பது இயற்கை நியதி ஆகிவிட்டது. இந்த வான நூல் அறிவினைத் தமிழர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்து வைத்துள்ளனர். அதற்கான அகச்சான்றுகள், சங்கநூல்களில் எண்ணற்றன இருக்கின்றன. அவற்றுள் ஒன்றாம் பெருமையினைப் பதிற்றுப் பத்தும் பெற்று பெருமையுற்றுளது. தைத்திங்களுக்கும், ஆணித்திங்களுக்கும் இடைப்பட்ட திங்கள்களுள் ஒன்றன, மாசித் திங்களில் பகற்போது குறைந்து இருக்கும் என்ற குறிப்பினை பதிற்றுப்பத்துப்பாட்டின் ஒரிரு வரிகள் உணர்த்தி, இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர்களின் வான நூல் அறிவிற்குச் சான்று பகர்ந்து கிடப்பது பாராட்டற்கு உரியது.

வேற்றுார் செல்ல விரும்புகின்ருன் ஒருவன். செல்ல வேண்டிய இடமோ நெடுந்தொலைவில் இருக்கிறது, மேலும் பகலில் நடத்து சென்றால் வெயிலின் வெப்பம் வாட்டும்; ஆயினும், கருதிச்செல்லும் பணியின் முக்கியத்துவமும் அவளைப் போகத்துரத்துகிறது ; அதலை விடியற்போதிலேயே புறப்பட்டுவிட்டான்; வெளியே வந்தான்; பனி மழைபோல் கொட்டுவது கண்டான்; தாங்கமுடியாக்குளிர்; திறந்த வெளியில் வாழ்ந்து பழகிவிட்ட விலங்குகளும் குளிர்க்கொடுமையால், உடல் குன்றிக்கிடந்தன. ஆயினும், வினைமுடிக்கவேண்டுமே என்ற வேட்கைமீதுாரக், குளிரையும் தாங்கிக்கொண்டு நடக்கின்ருன்; அவனுக்கு ஒரு நம்பிக்கை; இரவு கழிந்து, பகல் வந்து விட்டால் குளிரின் கொடுமை குன்றிவிடும் என்ற நம்பிக்கையால் விரைந்து நடக்கின்ருன்; ஆனால் அவன் நடக்க, நடக்க, பொழுது புலர்வதாகத் தெரிய வில்லை; அப்போது தான், அவனுக்கு, அது மாசித் திங்கள்;

16

16