பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. வடு அடும் நுண்அயிர்

ஆடுகோட்பாட்டுச்சேரலாதன், பகைத்து எதிர்ப்பவர்பால் கடுஞ்சினம்கொண்டு, பெரும்படைத்துணையோடு போர்க் களம் புகுந்து, அப்பகைவரைத் தப்பாது அழிக்கவல்ல தறுகளுண்மையில் தனக்கு நிகர்தானே எனினும், அவன், எப்பொழுதும் போர்நினைவாகவே இருப்பவன் அல்லன். போர் நேர்ந்தபோது, அதை திறம்பட முடிக்கவல்ல அவன், போர்ஒழிந்து அமைதி நிலவும் காலத்திலும், அந்நினைவே யுடையவனாய் இராது. அவ்வுணர்வு அறவே இல்லையாக, எவர்க்கும் எளியணுகி, இயற்கைக்காட்சிகள் மலிந்து, இன்பம் நல்கும் இடம் நாடிச்சென்று, ஆடல்பாடல்களில் அகம் களித்திருக்கும் இயல்புடையவனும் ஆவன். அதனல், தனக்குப் பகையாய் இருந்தாரையெல்லாம் வென்று பணிகொண்டு, நாட்டைப் பகைவர்பயம் அற்றதாக ஆக்கிவிட்ட உள்ள நிறைவுவரப்பெற்ற அவன், அமைதி நிலவும் இடம் அடைந்து, இயற்கைநலம் துய்க்கும் இன்ப வேட்கைக்கு அடிமைப்பட்டவணுகி, அதற்கு ஏற்புடைய இடம், குடநாடாதல் அறிந்து, ஒருமுறை, ஆங்குச் சென்றிருந்தான்.

ஓயாது ஆடி அசைந்து கொண்டிருப்பதையே தன் இயல்பாகக் கொண்டதும், கரைகாணமாட்டாப் பரப்புடையதுமாகிய நீரும், கலங்கிச் சேறுபடுமாறு, காற்று கடுமையாக வீச, மலைபோல் எழுந்துஎழுந்து அட்ங்கும் பேரலைகளின் ஓவெனும் ஒலி ஓயாது(ஒலிக்கும் கடலைச்சார்ந்த, கானற்சோலை களால் கவின்பெற்ற குடபுலம் அடைந்த சேரலாதன், நீர் நிறைந்த பள்ளங்களில் உள்ள மீன்களாகிய உணவினைப், பகலெல்லாம் தேடித்தின்று அலையும் நாரைகள், மாலை

19

19