பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகளிர் கைபுனைந்து ஆடும் துணங்கை கூத்தில், அம் மகளிரால் மதிக்கத்தக்கான் ஒர் ஆடவன் முதல்கை கொடுத்து ஆட்டத்தைத் தொடங்கி வைத்தல் வழக்கம் என்பதும், அவ்வாறு முதல்கை கொடுத்தல், தலைக்கை தருதல் என வழங்கப்படும் என்பதும் பின்வரும் வரிகளாலும் தெளிவாதல் காண்க.

மெல்லினர்க்கண்ணி மிலேந்த மைந்தர் எல்வளை மகளிர் தலைக்கை தரூஉ த்து’

-புறம்: 24: 829 'நிரைதொடி நல்லவர் துணங்கையுள் தலைக்கொள்ள’ -மருதக்கலி: 8, 16. 'மென்தோள் பல்வினைதழி இத் தலைத்தந்து’’

--முருகாற்றுப்படை :216

நாடாளும் அரசனின் மனைவியேயாயினும், கணவன் வேற்று மகளிர்பால் கருத்து செலுத்தப் பொருது ஊடல் கொண்டுவிடுவர். அதுவே மனைவியர்க்கு மாண்பாகும் என்பதை, அரசவைக்கண் மகளிர் ஆடலும் பாடலும் கேட்டு அகம் மகிழ்ந்து மெய்ம்மறந்துபோன கணவன் நிலைகண்டு ஊடல்கொண்டு, அரசவை ஆகவே, ஊடல் காரணம் கூருது, தலைநோய் காரணம் கூறி, அரசவை விடுத்து வெளியேறிய கோப்பெருந்தேவியார் செயல், உறுதி செய்வது காண்க.

'கூடல் மகளிர் ஆடல் தோற்றமும், பாடல் பகுதியும் பண்ணின் பயங்களும் காவலன் உள்ளம் கவர்ந்தன என்று தன் ஊடல் உள்ளம் உள் கரந்து ஒளித்துத் தலைநோய் வருத்தம் தன் மேலிட்டுக் குலமுதல் தேவி கூடாது ஏக'. .

-சிலம்பு : 16:131-136

38

38