பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. குண்டு கண் அகழி

வருவார்க்கு வழங்கி வளமார் புகழ்பெறத் துணைபுரிவது, வற்ருப் பெருநிதியே ஆதலின், ஈத்துப்பெறும் புகழின் பால் வேட்கையுடையவர், பொருளீட்டும் பணியினையும் பெருக மேற்கொள்ளுதல் வேண்டும் என்ற உண்மை உணர்ந்தவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். அதனுல் கொடுத்துப் புகழ் வளர்க்கும் அக்கோமகன், பொருட்செல்வத்தை அளவின்றிப் பெறுவான்வேண்டி, அண்டை நாடுகள்மீது போர் தொடுத்துச் சென்று, அந்நாட்டவரை வெற்றிகொண்டு, அவர்கள் பணிந்து வந்து திறையாகப் பெரும்பொருள் அளித்தவழி, அப்பொருளை மட்டுமே கொண்டு, ஆட்சிப் பொறுப்பினை அவர்பாலே அளித்து மீள்வதை வழக்கமாக மேற்கொண்டு இருந்தான்். அவ்வாறு, பகைவென்று திறைகொள்ளும் வழக்காறுடைய அவன், அது குறைவின்றி நிறைவேறத் துணைபுரியவல்ல .ெ பரி ய படையையும் பெற்றிருந்தான்். அவன் படையைச் சேர்ந்த போர்க்களிறுகள், போகும் நெறியில், யாதேனும் ஓர் அரசனையும், அவ்வரண் வாயிற்கதவையும் கண்டுவிட்டால், உடனே கடுஞ்சினம் கொண்டு விடும். பெருகி வழியும் மதநீர்கண்டு வண்டுக்கூட்டம் விடாது வந்து மொய்க்குமளவு மதம்பட்டுவிடும். தனக்குக் காவலாய்த் தன் இருபக்கமும் வருவார் ஏந்திவரும் குத்துக்கோலையும் மதியாது. காட்டில் வாழ்ந்திருந்த காலை, புலிகள் பலவற்ருேடு போராடிவென்று அழித்த போரில் பெற்ற, பெரிய பெரிய தழும்புகள் கிடந்து அணிசெய்யும் தன் நெற்றி முதலாக, நீண்டு தொங்கும் கையை மேலே உயர்த்தி வளைவாகச் சுருட்டிக்கொண்டு, தன்மீது அமர்ந்து தன்னை ஏவிவரும் பாகரின் கைத்தோட்டியையும் தூளாக்கிவிட்டு,

40

40