பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவர் ஆணையையும் கடந்து, அம்மதிற்கதவுகளை மோதி அழித்துவிடும்.

அத்தகு வேழங்கள் மலிந்த நாற்படையுடைமையால், வெற்றிக்கொடி பறக்க வாழ்ந்திருந்த ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், ஒருமுறை, தன்கோயிற்பண்டாரம் குறையுற்று விட்டதாக, பகைவென்று திறைகொள்ளும் வேட்கையுடையணுயிஞன். உடனே, அதைக்குறைவற நிறைவேற்ற வல்ல இடம் எது எனத் தேர்ந்து, ஆங்குச்சென்று பாசறை கொண்டான். படைகொண்டு வந்திருப்பவன் பேரரசன்; பேராற்றல் ப ைட த் த வ ன்; பெரும்படையுடையான்; என்ருலும், அவன் கருதி வந்திருப்பது பகைநாட்டு மண் அன்று; அந்நாட்டுப்பொன்; ஆகவே, அது அளித்தால் அவன் போரிடாதே போய்விடுவன் என்பதை அறிந்த அந்தப் பகை. நாட்டு மன்னன், வளம்குறைந்து வாழ்விழந்த நிலையை என்றும் கண்டறியாமையால், பொன்னும் நவமணியும் போலும் புதுப்புது வருவாய்களால் பொலிவுபெற்ற தன் நாட்டுச் செல்வத்தின் பெரும்பகுதியைத் திறையாகத் தந்து, 'இதுகொண்டு என்னை வாழவிடுவாயாக’ என வேண்டிக் கொண்டானுக, அதுகொண்டு அ வ னு க் கு வாழ்வளித்த ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், நாற்புறங்களிலும் வான்உயர் மலைகளே அரணுக நிற்க, அம்மலை நாட்டின் இடையே காவற்காட்டில்ை சூழப் பெற்றிருக்கும், தன் தலைநகர் நோக்கித் திரும்பிவிட்டான்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதைேடு சென்று, வென்று திறைகொண்ட அவன் வெற்றிச் செயலைக் கண்டுகளித்து, அவளுேடு வந்துகொண்டிருந்த புலவர் காக்கைப்பாடினியார், இடைவழியில் ஒரு பெரிய அரணைக் கண்ணுற்ருர். வானளாவ உயர்ந்து வளைந்து வளைந்து கிடந்த பெரு மதிலும், தன்

41

41