பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்வரண் அழிவைக் காக்குமுகத்தான்், பொருள் வேண்டிய வழியே, போருக்குப்போகும் அவன் அறப்போர் உள்ளம், பகை அரணைப் பார்த்த அளவே பாய்ந்து பாழாக்கும் அவன் படைப்பெருமை, நட்பரசர் நாட்டை நாசம் செய்ய நினையா நல்உள்ளம் முதலாம் பல்வேறு நல்வியல்புகளையும் நயமாகப் பாராட்டியுள்ளார்.

தன்கண் வீழ்ந்தாரைப்பற்றி உயிர்போக்கும் முதலைகள் வாழுமளவு ஆழம் உடைய அகழியால் சூழப்பட்டதேனும், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் அருள் உள்ளத்தினலேயே அழிவுற்றிலது என்ற பொருள் தோற்றுவித்து, அவன் அருள் ஆண்மைச் சிறப்புக்களை உணரத் துணைபுரிந்த நயம், குண்டு கண் அகழி என்ற தொடர்க்கே உண்மையாதல் கண்டு, இப்பாட்டிற்கு, அத்தொடரால் பெயரிடப்பட்டுளது.

53. வென்றுகலம் தரீஇயர், வுேண்டுபுலத்து இறுத்து, அவர்

வாடாயாணர் நாடுதிறை கொடுப்ப நல்கினை ஆகுமதி எம் என்றருளிக், கல்பிறங்கு வைப்பின், கடறு அரையாத்த நின் 5 தொல்புகழ் மூதூர்ச் செல்குவை யாயின்

செம்பொறிச் சிலம்பொடு அணித்தழை தூங்கும் எந்திரத் தகைப்பின் அம்புடை வாயில், கோள்வல் முதலைய குண்டு கண்அகழி, வானுற ஓங்கிய வளைந்துசெய் புரிசை, 10 ஒன்னத் தெவ்வர் முனைகெட விளங்கி

நின்னில் தந்த மன்எயில் அல்லது, - முன்னும் பின்னும் நின் முன்னேர் ஒம்பிய எயில் முகப்படுத்தல் யாவது? வளையினும் பிறிதாறு சென்மதி, சினங்கெழு குரிசில்! 15 எழுஉப் புறம் தரீஇப், பொன்பிணிப் பலகைக்

44

44