பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்நாற்படையை அறவே அழித்தொழித்த பின்னரே அவன் நாற்படை அமைதி நிலை அடையும்.

ஆடுகோட்பாட்டுச் சேரலாதனின் இப்படைப் பெருமை. யினையும் அதைப்பணிகொள்ளும் அவன் பேராற்றலையும், புலவர் காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் பண்டே அறிந்திருந்தார். ஆனால், அரசர் என்றால், ஆற்றலில் சிறந்திருப்பதும், அதற்கேற்ற படைத்துணை பெற்றிருப்பதும் இயற்கை; ஆகவே அவை உடைமையால், ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், புலவர் பாராட்டும் பெருமையுடையவனுகிவிடான் ஆதலின், அவனைச்சென்று காணும் ஆர்வம், புலவர்க்கு, அவன் படைப் பெருமை கேட்டபோது பிறக்கவில்லை. ஆனல் அப்போது உண்டாகாத அவ்வார்வம் அவன் கொடைப்புகழ் கேட்டதும் உண்டாகிவிட்டது.

ஆற்றல்மிகு ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், அருள் நிரம்பிய உள்ளத்தவனுமாவன். தன் அரண்மனையின் தலைவாயிற்கண் நின்று, தம் வறுமை கூறி இரப்பவர்க்கு அவர்கள் பிறிதோரிடம் சென்று மேலும் இரவாப்பெருவாழ்வு பெறுவதற்கு ஏற்ப, வாரி வாரி வழங்குவன். பெறுதற்கு அரிய பொருள்; அரும்பாடுபட்டு ஈட்டியது; ஆகவே இதை நாமே அடைவோமாக எனக்கருதி, எதையும் தனக்கென வைத்துக் கொள்ளாது, அனைத்துப் பொருளையும் அள்ளி அள்ளித்தருவன் என்ற அவன் கொடைப்புகழ், தமிழ் நாடெங்கும் சென்று பரவியிருந்தமையால், அவனைக்கானும் ஆர்வம் உந்த, அவடுை அடைந்து, அவனைக் கண்டார்புலவர் காக்கைப்பாடினியார். .

புலவர், அரசவை புகுந்து அவனைக்கானும் அந்நிலையி. லும் அவன் அருட்பணியே மேற்கொண்டிருந்தான்். சங்கு

50

50