பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளை ஒலிக்கும் முன்கைகள்: மலேமூங்கில்போலும் பருமையும் மென்மையும் வாய்ந்த தோள்கள்; அருள் சுரக்கும் விழிகள்; அழகெலாம் திரண்டு வந்தாற்போலும் வடிவம்; இத்தகு இயற்கை நலங்களோடு, பூந்துகில் ஆடை, பொன்னும் நவ மணியும் கொண்டு ஆக்கிய அணிகள்; வண்டுகள் விடாது மொய்க்குமளவு புதுமை நலம் கெடாப் பூ மல்கும் கார்குழல் போலும் செயற்கை நலங்களும் ஒரு சேரப்பெற்ற இளம் நங்கையர் பலர் ஒன்றுகூடி, ஆடுகோட்பாட்டுச்சேரலாதனின் மறப் புகழ்பரப்பும் பாடல்களைப் பாடியும், அப்பாடற் பொருள் புலப்படுமாறு ஆடியும் அவ்வரசவையை அணிசெய்ய, அவ்வாடல் பாடல்களால் அகம் நிறைவெய்திய மன்னவன், அவ்வாடல் மகளிர்க்கும், அவர்பின் வந்து வரிசைவரிசையாக நிற்கும் ஏனைய இரவலர்க்கும், பொன்னையும் பொருளையும் வரையறையின்றி வழங்கி வழியனுப்பி விடைகொடுக்கும் விழுமிய காட்சியைக் கண்டு களித்தார் புலவர்.

ஆடுகோட்பாட்டுச்சேரலாதனின் நாளோலக்க நலம் காணும் வாய்ப்பினைப்பெற்றமையால், அவன் ஆண்மை ஆற்றல்களின் விளைவாம் வெற்றிகளால் உண்டாகும் புகழினும், அவன் அன்புஅருள்களின் விளைவாம் கொடையால் ஆம் புகழே பயன்மிகுந்தது, பாராட்டற்கு உரியது என்பதை அறிந்த புலவர், அதை அவனுக்கு அறிவித்து, அவன் அருள் உள்ளத்தை மேலும் வளர்க்க விரும்பினர். ஆனால், எடுத்த எடுப்பிலேயே அது கூறினால், 'பாடிப் பரிசில் பெற்றுப் பிழைக்கும் இரவலர் இனத்தைச் சேர்ந்தவர்கள்தான்ே புலவர்களும்; அதனுல்தான்் இவரும் இது கூறினர்' என அவன் எண்ணிவிடுதலும் கூடும் என அஞ்சினர். அதல்ை, முதற்கண், பகைவர் தம் படைவரிசையின் முன் நிற்கும் வேழப் படையைக் கண்ட அ ள .ே வ, அடக்கவும் அடங்காது பாய்ந்து தாக்கும் அவன் படைப் பெருமையைப்

51

51