பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாராட்டிப், பின்னர், "வேந்தே னிறலியர் உன் மறப்புகழ் பாட, நீ வெற்றி பல, பெற்று வேந்தர் வேந்தனய் விழுச். சிறப்பு எய்துவதோடு, உன் புகழ்பாடும் அவ்விறலியர்க்கும், அவர் போலும் பிற இரவலர்க்கும் உன் வளங்களை வாரி வழங்குமுகத்தான்் வளமார் புகழ்பெருக்கி வாழ்வதை விடாது மேற்கொள்வாயாக!' என வாழ்த்தி, விரும்பியதே செய்து முடித்தார் புலவர் செள்ளையார்.

பகைவர்தம் போர்க்களிறுகளைக் கண்டஅளவே, அடக்கவும் அடங்காது விரைந்து பாயும் நாற்படையுடையான் என்ற தொடரே, அவன் ஆண்மையினையும், அத்துணைப் படையுடைய அவன்பால், அருளும் அளவின்றி அமைந்து கிடந்தது என்பதால், அவன் அருள் உள்ளத்தையும் ஒருசேர உணர்த்தும் சிறப்புடைமையால், நில்லாத்தான்ை என்ற அத்தொடரால், இப்பாட்டு, பெயர் பெறுவதாயிற்று.

54. வள்ளியை என்றலின் கண்டு வந்திசினே;

உள்ளியது முடித்தி; வாழ்க நின் கண்ணி! வீங்குஇறைத் தடைஇய அமைமருள் பணைத்தோன், ஏந்துஎழில் மழைக்கண், வனைந்து வரல் இளமுலைப், 5 பூந்துகில் அல்குல், தேம்பாய் கூந்தல்,

மின் இழை விறலியர் நின் மறம்பாட, இரவலர் புன்கண் தீர, நாள்தொறும் உரைசால் நன்கலம் வரைவில வீசி, அனயை ஆகன்மாறே; எனயது உம் 10 உயர்நிலை உலகத்துச் செல்லாது, இவண் நின்று

இருநிலம் மருங்கின் நெடிது மன்னியரோ! நிலம்தய விடுஉம் ஏணிப்புலம் படர்ந்து, படுகண் முரசம் நடுவண் சிலைப்பத், தோமர வலத்தர் நாமம் செய்ம்மார்,

52

52