பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமர்நோக்கி விரையும் படையினையுடைய. இறைகிழவோய் = அரசுரிமை வாய்ந்தவனே! வள்ளியை என்றலின் காண்கு வந்திசின் - வள்ளன்மையுடையாய் என அறிந்தமையால் வந்துளேன். வீங்கு இறைதடைஇய அமை மருள் பணத்தோள் = சந்து பொருந்தியவளை அணிந்த, மூங்கில் போலும் பருத்த தோளும். மழைக்கண் = குளிர்ந்த கண்களும். எந்துஎழில் = சிறந்த அழகும். வனைந்துவரல் இளமுலை = தொய்யில் எழுதப்பட்ட இளம் முலைகளும். பூந்துகில் அல்குல் = பூத்தொழில் பொருந்திய பட்டாடை அணிந்த அல்குலும். தேம்பாய் கூந்தல் = வண்டு மொய்க்கும் கூந்தலும். மின்இழை விறலியர் = ஒளிமின்னும் அணிகளும் உடையராகிய விறலியர், நின்மறம்பாட = உன் வெற்றிப்புகழை விளங்கப் பாட, இரவலர் புன்கண் தீர = அதுகேட்டு, அவ்விறலியர் போலும் இரவலர்களின் வறுமைத் துயர் போக, நாடொறும் உரைசால் நன்கலம் வரைவில வீசி=நாள்தோறும், புகழ்மிக்க நல்லபல பொருள்களை வரைவின்றி வழங்கி. அனையை ஆகன்மாறு = அவ்வருளியல்பு உடையை ஆதலாலே, எனையது உம் உயர்நிலை உலகத்துச் செல்லாது = ஒருசிறிது காலமும், உயர்நிலை உலகம் சென்று மறைந்துவிடாமல், இவண் நின்று, இருநில மருங்கின் நெடிது மன்னி உயரோ = பரந்த இப்பேருலகில், இவ்வரச வாழ்வில் இருந்து நெடிது காலம் நிலைபெறுவாயாக! உன்னியது முடித்தி = அவ்வாறு வாழும் நிலையால், யான் கரு தி வ ந் த ைத முடித்துத் தருவாயாக! வாழ்க நின் கண்ணி - உன் தலைமாலை வாழ்வதாக.

54