பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முரசம் துவைப்ப வாள் உயர்த்து பூணன், உழிஞையன் கனத்து ஆடும்கோ வியலுள் ஆங்கண், முழவின் முன்னரி ஆடல் வல்லான் அல்லன்: வாழ்க அவன் கண்ணி! எனக் கொண்டு கூட்டுக.

இதன்பொருள்:-வலம்படு முரசம் துவைப்ப = வெற்றி முரசம் முழங்க, வாள் உயர்த்து = வானே உயரத்துக்கி. இலங்கும் பூணன் - ஒளிவீசும் அணிகள் அணிந்து. பொலங் கொடி உழிஞையன் - பொன்னல் ஆன உழிஞைக் கொடியைச்சூடி, மடம் பெருகையின் - அறியாமை மிகுதியால், உடன்றுமேல் வந்த = பகைகொண்டு தன்மேல்வத்த. வேந்து = பேரரசர்கள், கெய்ம்மறந்த வாழ்ச்சி = தம் உடம்பை மறந்து, அழியா வீட்டுலக இன்ப வாழ்வைப் பெறுதலால். வீந்து உகு = இறத்து வீழும். போர்க்களத்து = போர்க்களத்தில். ஆடுங்கே = வெற்றிக்கூத்து ஆடவல்லவகிைய வேந்தன். விழவு வீ ற் றி குந்து = விழா நிகழ்ச்சிகள் மிகச் சிறப்புற நிகழும். வியலுள் ஆங்கண் = அகன்ற ஊரில் கோடியன் முழவின் முன்னர்-கூத்தர்களின் முழாவோசைக்கு எற்ப, ஆடவல்லான் அல்லன் = ஆடும் தொழிலில் வல்லவன் அல்லன். அவன் கண்ணி வாழ்க = அவன் தலைமாலை வாழ்வதாக,

ss

65