பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஏவிளங்கு தடக்கை

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மலைநாட்டான் ஆதலின், காதுவெளுக்குமாறு பேரிரைச்சல் செய்யும் சில்வீடு எனும் வண்டுகள், துளை செய்துகொண்டு வாழும் பொரித்த அடி மரத்தையும், சின்னஞ்சிறு)இலைகளையும் உடையவாகிய, வேல மரங்களே மலிந்த மலைக்காட்டு நிலமாகிய ஆங்கு, நெல்லும் கரும்பும் போலும், நன்செய்ப்பொருள்வளம் இல்லையாயினும், அதல்ை அது குறைபாடுடையதாகாது. அந்நிலங்களை உழுது பயன்கொள்ளும் உழவர்களின் அயரா உழைப்பிற்கேற்ற பெரும்பயனை வழங்க, அவ்வன்னிலங்கள் தவறு வதில்லை. மழைவளம் காணு அம்மேட்டுநிலங்களைப், பெரிய கலப்பைகளில், உரம்மிக்க காளைகளைப் பூட்டி ஆழஉழுங்கால், அவ்வன்னிலத்துக்கு அடியில், ம ைற ந் து கி டக் கு ம் மாணிக்கங்கள், தாமே வெளிப்பட்டுப் படைச்சால்தோறும் பேரொளிகாட்டித் தோன்ற, உழவர்கள், உழுதொழில் மேற்கொண்ட அப்போதே, பெரும்பயன் பெற்றுவிடுவர். அத்தகு பெருவளம் மிக்க பரந்த நாட்டை ஆட்சிபுரிந்து வந்தான்் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்.

அவன்நாடு, அத்துணைச் செல்வநலம் உடையதாகவும், அவன் புகழ்பாடும் பெரியோர்கள், அவ்வளம் காட்டி அவனை வாழ்த்துவது இலர். நாடு அளிக் கும் நல்வளம் அது. ஆகையால், அது, அவனுக்குப் புகழ் அளிப்பதாகாது. மேலும், தம்புகழைத் தாமே ஈட்டிக்கொள்ள அறியாதாரே, தம்நாடு அளிக்கும் நலத்தால் தம்புகழ் நாட்ட நினைப்பர். அக்குறைபாடு, ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்கு இல்லை. தன் ஆண்மை ஆற்றல்களினலேயே பெரும்புகழ் நாட்ட வல்லவன் அவன். . -

71