பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மையான வீரனுக்குரிய பண்புகளால் நிறைந்தவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன். அவன் மட்டும் அன்று; அவன்கீழ்ப் பணிபுரியும் அனைத்து வீரர்களும் அவனைப் போலவே பண்புமிகு பெருவீரராவர். தாம் சேரர்படைவீரர் என்பதை உணர்த்தும் பனந்தோட்டு மாலையை, அவர்கள் என்றும் மறந்து அறியார். தாம் விரும்பும் குவளைமலர்க் கண்ணியையும், அப்பனந்தோட்டின் வெண்ணுர் கொண்டே தொடுத்துக் கொள்வர். அரசகுலத்தவர்.பால் அத்துணைய, மாரு அன்புடைய அவர்கள், களம்பலபுகுந்து, வாள்வடுப் பெறுவதை வாழ்வின் பேருகக்கொண்டு, அத்தகைய விழுப்புண்கள் பல விளங்கும் பருவுடல் உடையவராவர். பகைவர்க்கு இடியேறு போலும் பெருங்கேட்டினை விளைக்கவல்ல தம் கைகளில், பகைவர் உயிர்குடிக்கும் கொடிய படைக் கலங்களை ஏந்தும்போதும், .ே வ ந் த ன் அளித்த செஞ்சோற்றை, இன்று வயிறுபுடைக்க உண்டோம். நாளை, பகையரசர்களின் பற்றற்கரிய பெரிய கோட்டைகளைக் கைக்கொண்டு உட்புகுந்து, ஆங்கு உண்பதல்லது வெற்றி காணுது வெளியே கிடந்து உண்ணேம்” என்ச்சூளுரை புகன்றவாறே படைக்கலம் ஏந்தும் அவர்கள், தாம் உரைத்த சூள் பொய் படாவாறு அரும்போர் ஆற்றவல்லவரும் ஆவர். அம்மட்டோ! அவர்கள் உரைத்தவஞ்சினம் என்றும் பொய்யாகாது. வஞ்சினம் வ ழ ங் கு ம் தங்கள் நாக்கிற்கு, ஒர் இழுக்கு நேராவாறு, அவ்வஞ்சினம் வாய்ப்ப வென்று, 'பொய்யா நாக்கு’ என்ற பெருமையைத் தங்கள் நாக்கிற்குச் சூட்ட வல்லவர். மேலும், எளிதில் அழிக்கலாகா அகலமும் திண்மை. யும் வாய்ந்தவை எனப் பாராட்டத்தக்க, பகைவர்களின் பெரிய பெரிய அரண்களையெல்லாம், எளிதில் பாழாக்கவல்ல பெரியவில்லையும், 'கூரிய அம்புகளையும் பணிகொள்ளவல்ல கைவன்மை வாய்க்கப் பெற்றவர். விற்போர் புரிந்து புரிந்து, விரிந்து அகன்ற மார்புடையராகி மாண்புமிகப் பெற்றவர்.

72