பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்குலத்தவர் அ னை வ ை யு ம் பொதுவகையால் குறிக்கும் வானவரம்பர் என்ற பெயர், தன்பெருநிலையால் தனக்கே உரித்தாகப் பெற்ற ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், அத்தகு பெருவீரர்களையே தேர்ந்து, தன்படையில் பணி. யாற்றச் செய்தும், அவர்க்கு, உணவு உறையுள்களால் குறைநேராவாறு நின்று க ா த் து ம் பெருமையுற்று விளங்கின்ை. - -

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன், தன்- அறிவு ஆற்றல் களால் பெற்ற இப்புகழே, அவனுக்குப், பெருமை அளிப்ப. தாகும் என உணர்ந்த ஆன்ருேர்கள், அவன், அத்தகு வளநாடு உடையணுகவும், அதுகூறி, அவனைப் பாராட்டாது, அவன் படையில் பணிபுரியும் போர்வீரர் பெருமைகளையும், அவ்வீரர்களை ஒம்பிப் பணிகொள்ளும், அவன் பெருமைகளையும் கூறியே பாராட்டுவராயினர்.

அம்மரபுகண்டு மகிழ்ந்த புலவர் காக்கைப் பாடினியாரும், அவன்பால் பரிசில் பெற விரும்பும் விறலியர், அவன் ஆண்மை தோன்றும் ஆடல்களே மேற்கொள்வாராக! பாணர்கள், அதுவே பொருளாகக் கொண்டு, பாட்டிசைப்பார்களாக என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வீரராவார், பெரிய கைகளை மட்டும் பெற்றிருப்பதாலோ, கூரிய அம்புகளை மட்டும் கொண்டிருப்பதினலோ, பயன் பெறுவார் அல்லர்; அவ்வம்புகளை எய்யும் திறம் அறிந்து எய்யவல்ல அறிவும் ஆற்றலும் அமைந்த கையுடையராய வழியே பயன் பெறுவர். இந்த உண்மையை, ஏ விளங்கு தடக்கை என்ற தொடர், உணர்த்துவதால், அத்தொடரே, இச்செய்யுட்டொடருக்குப் பெயராய் அமைந்து பெருமை தருகிறது. -

73

73