பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. ஆடுக விறலியர் ! பாடுக பரிசிலர்!

10

15

வெண்தோட்டு அசைத்த ஒண்பூங்குவளையர், வாள்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர், செல்உறழ் மறவர்தம் கொல்படைத் தரீஇயர் ‘இன்று இனிது நுகர்ந்தனம்ஆயின், நாளை மண்புனை இஞ்சி மதில் கடந்தல்லது உண்குவம் அல்லோம் புகா' எனக்கூறிக் கண்ணிகண்ணிய வயவர் பெருமகன்! பொய்படுபு அறியா வயங்கு செந்நாவின், எயில்எறி வல்வில், ஏவிளங்கு தடக்கை ஏந்துஎழில் ஆகத்துச் சான்ருேர் மெய்ம்மறை! வானவரம்பன் என்ப, கானத்துக் கறங்கிசைச்சிதடி பொரியரைப் பொருந்திய சிறியிலை வேலம் பெரிய தோன்றும் புன்புலம் வித்தும் வன்கைவினைஞர் சீருடைப் பல்பகடு ஒலிப்பப் பூட்டி நாஞ்சில் ஆடிய கொழுவழி மருங்கின் அலங்குகதிர்த் திருமணி பெறுஉம் அகன்கண் வைப்பின் நாடுகிழவோனே' துறை : செந்துறைப் பாடாண் பாட்டு வண்ணம் : ஒழுகுவண்ணம் தூக்கு : செந்தூக்கு பெயர்: ஏவிளங்கு தடக்கை

நாடு கிழவோனே (12-19), வயவர் பெருமகன் (2.8) சான்ருேர் மெய்ம்மறை (9-11) வானவரம்பன் என்ப(12). ஆகவே அதுவே கூறி, விறலியர்காள் ஆடுக! பரிசிலர் காள்

பாடுக! (1) எனக்கூட்டிப்பொருள்கொள்க.

காடுகளில் ஒலிக்கும்

இதன் பொருள் : கானத்துக் கறங்கு இசைச் சிதடி = பேரிரைச்சலையுடைய சில்வீடு எனும்

74

74