பக்கம்:வடு அடுநுண் அயிர்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நன்கலம் தருஉம் நாடு புறந்தருதலும் கடம்ை. வாழ்க நின் கண்ணி! எனக் கூட்டிப் பொருள்கொள்க.

இதன் பொருள்:-பகல் நீடு ஆகாது = பகற்காலம் நீளாமல், இரவுப்பொழுது பெருகி நின்ற = இராக்காலம் நீண்டு செல்லும். மாகூர் மாசித் திங்கள் = விலங்குகள் குளிரால் குன்னுக்கும் மாசித் திங்கள்களில், பனிச்சுரம் படரும் பாண்மகன் உவப்ப = பணிமிக்க கொடிய வழிகளைக் கடந்து செல்லும் பாணன் மகிழுமாறு. புல் இருள் விடிய = புல்லிய இருள் சூழ்ந்த விடியற்காலம் கழிய. புலம்பு சேண் அகல = இருளாலும் குளிராலும் ஆகும் வருத்தம் அறவே நீங்கி ஒழிய, பாய் இருள் நீங்க = இராக்காலத்தே எங்கும் பரந்திருந்த பேரிருள் அகல. பல்கதிர் பரப்பி = தன் ஒளிக்கதிர்கள் முன்னே பரப்பி. ஞாயிறு குணமுதல் தோன்றியாங்கு = பின்னர், ஞாயிறு கீழ்த்திசை அடிவானத்தில் தோன்றியது போல, இரவல் மாக்கள் சிறுகுடி பெறுக = இரவலர்களின் வறுமையால் வாடியகுடி வளம்பெற்றுப் பெருகுமாறு. உலகம் தாங்கிய மேம்படு கற்பின் = உ ல ைக இனிது ஆண்ட மேம்பட்ட ஆட்சியுடையோராகிய, வில்லோர் மெய்ம்மறை= விற்கொடி உயர்த்திய சேரர்குடியில் தோன்றி, மெய்புகுகவகம் போல் நின்று காப்பவனே! வீற்றிருக்கும் கொற்றத்துச் செல்வர் செல்வ = செம்மாந்து வீற்றிருக்கத்தக்க கொற்றம் உடைமையால் சி ற ந் தோரா கி ய வேந்தர்க்கெல்லாம் வேந்தளுய் உள்ளோனே! சேர்ந்தோர்க்கு அரணம்=தன்னை அடைந்தவர்க்கு அரணுய் நின்று காப்பவனே! நின்பகைவர் = உன் பகைவர். அறியாது எதிர்ந்து = உன் ஆற்றல் அறியாது எதிர்த்துப் ப்ோரிட்டு. துப்பின் குறையுற்று = உன் ஆண்மையால் ஆற்றல் இழந்து பணிந்து திறை தருவராயின் - பணிந்து வந்து திறை தருவாராயின். சினம் செலத் தணிமோ = பண்டு கொண்ட சினம்கெட அவர்பால்

84

84