பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

qua

93

rea


 qualilfied report — தகுதியறிக்கை: ஒரு நிறுமத்தின் உண்மையான நிலையைக் காட்டும் தணிக்கையாளர் அறிக்கை

quality control - தரக்கட்டுப்பாடு பல நிலைகளில் உற்பத்தியாகும் பொருள்களின் தரத்தை உறுதி செய்தல்

quick assets — விரைவுச் சொத்துக்கள் பா. liquid assets.

quorum - சிற்றெண்: குறைவெண். ஒரு கூட்டத்தின் நடவடிக்கைகள் சட்ட இணக்கம் பெற, அக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டியவர்களின் மிகக்குறைந்த எண்ணிக்கை. இது நிறுவனத்திற்குத் தகுந்தவாறு மாறுபடும்

quota- பங்களவு வரையறையளவு. ஒரு குறிப்பிட்ட பொருளின் இறக்குமதி ஏற்றுமதி பற்றிய வரம்பு. பங்காளர்கள், உரிமங்கள் வழங்குவதன் மூலம் கட்டுப்படுத்தப்படுபவை ஒ.ration.

quotation— விலைப்புள்ளி: 1) ஏற்புடைய பங்குச்சந்தையில் ஓர் ஈட்டின்குறிப்பு 2) விற்பனையாளர் தன் சரக்குகளை விற்க விரும்பும் விலை 3) கூறும் விலை

quoted price-கூறும் விலை: ஓர் ஈடு அல்லது பண்டத்தின் அலுவலக விலை. செய்தித்தாள்களில் விலை கூறப்பட்டிருக்கும்


R

rate of exchange- பரிமாற்றுவீதம்: ஒரு செலர்வணி மற்றொரு செலாவணியில் குறிக்கப்படும்விலை எ-டு. ரூபாய்-டாலர்

rate of interest வட்டி வீதம் பா வீதங்கள், வரி வீதங்கள்

rates- வீதங்கள்: தகவுகள். கட்டண வீதங்கள், வரி வீதங்கள்

rationalization- சீராக்கம்: ஒரு நிறுமத்தின் திறன், இலாபம் ஈட்டல் ஆகியவற்றை உயர்த்த, அதைத் திருத்தி அமைத்தல். இது அகச்சீராக்கம், புறச்சீராக்கம் என இருவகை

ready-made cloth- ஆயத்தஆடை: உடன் பயன்படுவதற்கேற்ற பலவகை ஆடைகள். ஆடை தயாரித்தல் ஒரு பெருந்தொழில்

real estates - மெய்ச்சொத்துகள்: வீடு,நிலம் முதலியவை

real investment-மெய் முதலீடு: முதலீட்டுக் கருவித் தொகுதிக்குச் செய்யப்படும் செலவு எ-டு. தொழிற்சாலை,ஆலை,பள்ளி,அணைக்கட்டு

realization account – கைவரு கணக்கு: சொத்துகள் விற்கும் பொழுது அதைப் பதிவு செய்யப்பயன்படுங்கணக்கு. அதிலிருந்து அவ்விற்பனையால் இலாபமா நட்டமா என்பதை உறுதிசெய்யலாம்