பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

sales

98

sec


 sales proceeds – விற்பனைத் தொகை.

sales promotion – விற்பனை உயர்வு : ஒரு விளைபொருளின் விற்பனயை உயர்த்த விளம்பரம் மூலம் வடிவமைக்குஞ் செயல்.

sales representative – விற்பனைப் பேராளர்: ஒரு நிறுமத்திற்காக அதன் பணியாளராக இருந்து, அதன் சரக்குகளை விற்பவர். விற்பனைத் தொகை யில் இவருக்கும் கழிவுண்டு.

sales return – விற்பனை திருப்பம்: உள்திருப்பம். சரக்கு தரங்குறைந்திருப்பின், வாங்கி யவர் அதை விற்றவருக்குத் திருப்பியனுப்புதல்.

sales return book. - விற்பனைத் திருப்ப ஏடு: வாங்கியோர் திருப்பியனுப்பும் சரக்கு, இதில் பதியப்படும். உள்திருப்ப ஏடு.

sales tax- விற்பனை வரி : சரக்குகளின் விற்கும் விலையின் அடிப்படையில் அமையும் வரி.

sample - மாதிரி: மொத்த சரக்குகளைக் குறிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டு வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் சிறு அளவு.எ-டு. சவர்க்காரம்.

savings - சேமிப்புகள்: வருமானத்தில் செலவுபோக மீதி இருப்பவை. பெரும் பொருளியலில் இச்சேமிப்பு ஓர் இன்றியமையாக் கருத்து.

savings account – சேமிப்புக் கணக்கு: வங்கியில் வைக்கப்படும் சிறு தொகைக் கணக்கு. இதற்கு வட்டியுண்டு.

savings ratio – சேமிப்பு வீதம்: செலவழிக்கக் கூடிய வருமானத்திற்கும் தனியாட்களின் சேமிப்புகளுக்கும் இடையே உள்ள வீதம்.

scrip - உரிமை ஆவணங்கள்: பங்குகளின் உரிமையை விளக்கும் சான்றிதழ்கள்.

scrip issue – உரிமை ஆவண வெளியீடு: வேறு பெயர்கள் ஊக்கத் தொகை வெளியீடு முதலாக்க வெளியீடு, தடையிலா வெளியீடு.

secret reserve — மறைகாப்பு: இருப்பு நிலைக் குறிப்பில் காட்டப்படாதது. வங்கி, காப்பீட்டுக் கழகம், மின்னாற்றல் நிறுமம் ஆகியவற்றில் இக்காப்பு ஏற்படுத்தப்படுகிறது.

secured debenture – ஈட்டுக்கடன் ஆவணம்: சொத்தை ஈடுகாட்டிப் பெறும் கடன் பத்திரம் எ-டு. அடமானக் கடன் பத்திரங்கள்.

sectional balancing — பகுதி இருப்புக் கட்டல்.

secured liability — ஈட்டுப் பொறுப்பு: ஈடுள்ள கடன்.