பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

sec

99

share


 security — ஈடு : பிணையம். வாங்கும் கடனுக்கு ஈடாக வைக்கப்படும் சொத்து.

selling costs — விற்கும் செலவுகள்: ஒரு விளை பொருளை விற்க ஆகும் செலவுகள். இவற்றில் விளம்பரம், பின் விற்பனைப் பணி, ஊதியம், கழிவு முதலியவை அடங்கும்.

service - பணி : ஒரு பொருளாதாரச் சரக்கு உழைப்பு, திறம் முதலிய வடிவத்தில் அமைந்து மனித மதிப்புள்ளதாக இருக்கும்.

service station – பணிவழங்கு நிலையம் : ஒரு கருவித் தொகுதிக்குப் பழுது பார்ப்பு பணிபார்ப்பு முதலியவற்றை வழங்குவது.

services, consumer :பலநிலைப் பணிகள்: உணவு வழங்கல், வெளுத்தல், விசை இயல் முதலிய தொழில்கள், தொழிற் சாலையை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: 1) பிரிப்புத் தொழிற்சாலை 2) உற்பத்தித் தொழிற்சாலை 3) பணித் துறைகள்.

services, professional:தொழிற்பணிகள்: வழக்கறிஞர், மருத்துவர்கள் முதலியவர்கள் வழங்கும் பணிகள்.

settlement — கடன் அடைப்பு: 1) பற்றுக்கணக்கு, இடாப்பு முதலியவற்றிற்குரிய தொகையைக் கொடுத்தல். 2) உடைமைப்பாடு : சட்டப்படி ஒருவர் தம் சொத்தைப் பிறருக்கு ஆவணம் எழுதி உரிமை மாற்றுதல் 3) தீர்வு: ஓர் உரிமை இயல்வழக்கு அல்லது தொழில் தகராறு இருதரப்பினருக் கிடையே ஏற்படும் உடன் பாட்டின் மூலம் முடிவுக்கு வருதல்.

settlor - உடைமைப்பாட்டாளர்: உடமைப்பாடு அல்லது அறக்கட்டளையை உருவாக்குபவர்.

share - பங்கு: ஒரு நிறுமத்தை வரையறைப்படுத்தும் பங்குத் தொகை. I)பொது வகைகள்: 1) பொதுப் பங்குகள் 2) முன்னுரிமைப் பங்குகள். II) பிறவகைகள்: 1) பின்னுரிமைப்பங்கு 2) குவி முன்னுரிமைப் பங்கு 3) நிறுவனப் பங்கு 4) பாதி செலுத்தப்பட்ட பங்கு 5) விரும்பு பொதுப்பங்கு 6) மீட்பு முன்னுரிமைப் பங்கு 7) தவணைப் பங்கு 8) ஒப்பிய பங்கு.

share account – பங்குக் கணக்கு: வைப்பு நிதிக் கணக்கு.

share capital-பங்குமுதல்: ஒரு நிறும முதலின் பகுதி. பங்குகள் வெளியீட்டினால் உண்டாவது.

share capital, authorised – ஏற்றுக் கொள்ளப்பட்ட முதல்: