பக்கம்:வணிகவியல் அகராதி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

staff

103

statu




staff -- பணியினர்:பணிக் குழுவினர் பா.personnel.

stale cheque – நாட்பட்ட காசோலை: காலாவதியான காசோலை. மாற்றுவதற்குரிய காலம் கடந்தது.

stamp duty – முத்திரை வரி: ஆவணவரி, ஆவணங்களை முத்திரை இடுவதன் மூலம் கிடைக்கும் வரி.

standard costing — திட்டச் செலவு: செலவுக்கட்டுப்பாட்டு முறை. கச்சாப் பொருள் விலை, உழைப்பு வீதம், எந்திரச் செலவு, நிலையான மேற் செலவுகள் ஆகியவற்றிற்கு முன் கூட்டியே திட்டச்செலவு கள் உறுதி செய்யப்படுதல்.

standby agreement – சார்பு உடன்பாடு: அனைத்துலகப் பண நிதியத்திற்கும் அதன் உறுப்பு நாடுகளுக்கிடையே ஏற்படும் உடன்படிக்கை.

standing order — நிலையானை: ஒரு வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்குப் பெறுநருக்குக் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட தொகையை வழங்குமாறு அறி வுறுத்தல்.

standstill agreement – நீடிப்பு ஒப்பந்தம்: 1) இரு நாடுகளுக் கிடையே ஏற்படும் உடன்பாடு. இதில் ஒரு நாடு கொடுக்க வேண்டிய கடன் குறிப்பிட்ட தேதிக்குத் தள்ளிப் போடப்படும் 2) பேரக்காரருக்கும் ஒரு நிறு வனத்திற்கு மிடையே ஏற்படும் ஒப்பந்தம்.

state banks – பாரத வங்கிகள்: இந்திய வணிக வங்கிகள்.

statement of account – கணக்கறிக்கை: ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத்தன் வாடிக்கை யாளரிடம் கொண்டுள்ள நட வடிக்கைகளை ஒரு நிறுவனம் பதிவு செய்யும் ஆவணம். இது கொடுக்கல் வாங்கல் பற்றியது.

statement of affairs — நிலை விளக்க அறிக்கை: நொடித்த ஒருவர் அல்லது கலைப்பு நிலையில் இருக்கும் ஒரு நிறு வனத்தின் இருப்பு பொறுப்பு பற்றிய அறிக்கை.

statistics – புள்ளியியல்; 1) செய்திகளைத் திரட்டி வகைப்படுத்தி எண் வடிவத்தில் அளிக்கும் கணக்குத்துறைப் பிரிவு 2) புள்ளிகள்: எண்கள் மூலம் செய்தி தெரிவிக்கப்படும் முறை.

statutory - சட்டமுறை: இந்தி யாவில் இதன்படி பாரத வங்கி, தொழில் நிதிக் கழகம், வாழ்நாள் காப்பீட்டுக் கழகம் ஆகியவை நாடாளுமன்றத்தில் சட்டம் நிறை வேற்றப்பட்டு அமைக்கப்பட்டவை.

statutory audit – சட்டமுறைத் தணிக்கை.